சினிமா செய்திகள்

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் நானிக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி + "||" + Sexual complaint, Srireddy released the video against actor Nani

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் நானிக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி

பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் நானிக்கு எதிராக வீடியோ வெளியிட்ட ஸ்ரீரெட்டி
பாலியல் புகாரில் சிக்கிய நடிகர் நானிக்கு எதிராக, நடிகை ஸ்ரீரெட்டி வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

பட வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு அழைப்பதாக நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மீது பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. பிரபல இயக்குனர் கொரட்டல சிவா, நடிகர் ராணாவின் தம்பி அபிராம் உள்ளிட்ட பலர் இவரது குற்றச்சாட்டில் சிக்கினார்கள்.

நான் ஈ படத்தில் நடித்து பிரபலமான நானி மீதும் செக்ஸ் புகார் கூறினார். “நானி சினிமா வாய்ப்புக்காக போராடியபோது என்னுடன் நட்பானார். புகை, மது, போதை பழக்கங்கள் அவருக்கு இருந்தன. அவருடைய படங்களில் நடிக்க வாய்ப்பு தருவதாக சொல்லி என்னை தவறாக பயன்படுத்தி ஏமாற்றினார். ஒரு நாள் மது பாட்டிலுடன் வீட்டுக்கு வந்து என்னையும் குடிக்க தூண்டினார்” என்றார்.

இந்த குற்றச்சாட்டை நானியின் மனைவி அஞ்சனா மறுத்ததுடன் ஸ்ரீரெட்டிக்கு கண்டனமும் தெரிவித்தார். தற்போது ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ‘ரெட்டி டைரி’ என்ற பெயரில் படமாக தயாராகிறது. இந்த படத்தில் தனக்கு செக்ஸ் தொல்லை கொடுத்தவர்களை வெளிப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சில மாதங்கள் அமைதியாக இருந்த ஸ்ரீரெட்டி இப்போது தனது அரைகுறை உடையில் தனது இடுப்பை காட்டி கவர்ச்சி வீடியோவை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இந்த வீடியோவை நடிகர் நானிக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார். இது தெலுங்கு பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நானியும் அதிர்ச்சியாகி உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. இந்திக்கு எதிராக வைகோ கோஷம் - மாநிலங்களவையில் பரபரப்பு
மாநிலங்களவையில் இந்திக்கு எதிராக வைகோ கோஷம் எழுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கிரிக்கெட்: வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிராக இந்திய ஏ அணி போராடி தோல்வி
அதிகாரபூர்வமற்ற 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் ஏ அணிக்கு எதிரான ஆட்டத்தில், இந்திய ஏ அணி போராடி தோல்வி அடைந்தது.
3. வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு
வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக அரைசதம் அடித்த டோனிக்கு தெண்டுல்கர் பாராட்டு தெரிவித்துள்ளார்.
4. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ரோகித் சர்மா, ஷிகர் தவான் ஜோடி அதிக ரன்கள் குவித்து சாதனை படைத்தது.
5. பிரதமருக்கு எதிராக அவதூறு: ராகுல் காந்தி மீதான வழக்கில் தீர்ப்பு நிறுத்திவைப்பு - டெல்லி கோர்ட்டு உத்தரவு
பிரதமருக்கு எதிராக அவதூறாக பேசியதாக ராகுல் காந்தி மீது பதிவான வழக்கில், தீர்ப்பை நிறுத்திவைத்து டெல்லி கோர்ட்டு உத்தரவிட்டது.