சினிமா செய்திகள்

துணை இயக்குனரான நடிகை அனுபமா பரமேஷ்வரன் + "||" + Anupama Parameswaran as assistant director in Dulquer’s production venture

துணை இயக்குனரான நடிகை அனுபமா பரமேஷ்வரன்

துணை இயக்குனரான நடிகை அனுபமா பரமேஷ்வரன்
நடிகை அனுபமா பரமேஷ்வரன் துல்கர் சல்மான் தயாரிக்கும் படம் ஒன்றில் துணை இயக்குனராக பணிபுரிகிறார்.
மலையாளத்தில் 'பிரேமம்' அறிமுகத்திற்குப்பின் ஒன்றிரண்டு மலையாள படங்கள், தெலுங்கு படங்களில் நடித்த அனுபமா பரமேஷ்வரன் தமிழில் 'கொடி' படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தார். 

தற்போது துல்கர் சல்மானின் முதல் சொந்தத் தயாரிப்பான பெயரிடப்படாத படம் ஒன்றில்  கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்தில் கதாநாயகியாக நடித்து கொண்டே உதவி இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.

இதுகுறித்து அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறி இருப்பதாவது;-

துல்கரின் முதல் தயாரிப்பான இப்படத்தில் ஷம்சு சாய்பா இயக்கத்தில் உதவி இயக்குநராகப் பணிபுரிவதை பெருமையுடன் பகிர்ந்து கொள்கிறேன். இந்த படக்குழுவை மிகவும் நேசிக்கிறேன். ஒரு படத்தின் வளர்ச்சியை ஒவ்வொரு அங்குலமாக கூட இருந்து தரிசிப்பது புது அனுபவமாக இருக்கிறது. அடுத்தடுத்த தகவல்களுக்கு அப்டேட் செய்கிறேன்' என்று பதிவிட்டிருக்கிறார்.தொடர்புடைய செய்திகள்

1. பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு
தென்னிந்திய திரைப்பட நடிகர்கள் சங்க தேர்தலுக்கு பாதுகாப்பு கேட்டு சென்னை போலீஸ் கமிஷனரிடம் நடிகர் விஷால் மனு கொடுத்தார்.
2. பெண்ணிடம் தகாத முறையில் பேசிய கேரள நடிகர் மீது வழக்குப் பதிவு
கேரளாவை சேர்ந்த நடிகர் வினாயகன், தலித் பெண் சமூக செயற்பாட்டாளரிடம் செல்போனில் தகாத முறையில் பேசியதாக கூறி 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
3. பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே
பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை பூனம் பாண்டே.
4. நடிகர் சங்க தேர்தல் : நடிகர் கமல்ஹாசனிடம் ஆதரவு கேட்ட பாக்யராஜ் அணியினர்
நடிகர் சங்க தேர்தலில் நடிகர் கமல்ஹாசனை சந்தித்து பாக்யராஜ் அணியினர் ஆதரவு கேட்டனர்.
5. தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் புகாரில் ஆதாரங்கள் இல்லை -மும்பை போலீஸ்
தனுஸ்ரீ தத்தா நானா படேகர் மீது கூறிய பாலியல் குற்றச்சாட்டில் ஆதாரங்கள் இல்லை என போலீஸ் தரப்பில் மும்பை கோர்ட்டில் கூறப்பட்டு உள்ளது.