சினிமா செய்திகள்

வசூலில் சாதனை படைத்து வரும் பி.எம். நரேந்திரமோடி படம் + "||" + PM Narendramodi movie records in collection

வசூலில் சாதனை படைத்து வரும் பி.எம். நரேந்திரமோடி படம்

வசூலில் சாதனை படைத்து வரும் பி.எம். நரேந்திரமோடி படம்
திரையிடப்பட்டு சில நாட்களே ஆன பி.எம். நரேந்திரமோடி என்ற வாழ்க்கை வரலாற்று இந்தி படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
திரையிடப்பட்டு சில நாட்களே ஆன பி.எம். நரேந்திரமோடி  என்ற வாழ்க்கை வரலாற்று இந்தி படம், வசூலில் சாதனை படைத்து வருகிறது.  பாலிவுட் இயக்குநர் ஓமங் குமார் இயக்கத்தில் உருவான இந்த படத்தில் நரேந்திர மோடியாக விவேக் ஓபராய் நடித்துள்ளார்.  அமித்ஷா வேடத்தில் மனோஜ் ஜோஷி மற்றும் வாஜ்பாய் வேடத்தில் ஆன்ஜன் ஸ்ரீவஸ்தவ் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தில், நரேந்திரமோடியின் தாயார் ஹீரா பென் மோடி வேடத்தில் ஜரீனா வஹா நடித்து முத்திரை பதித்துள்ளார். ரெயில் நிலைய டீ விற்பனை செய்யும் சிறுவனாக வாழ்க்கையை துவக்கி, படிப்படியாக உயர்ந்து நாட்டின் மிக உயரிய பிரதமர் பதவி வரை எட்டிப்பிடித்த நரேந்திரமோடியின் வாழ்க்கை வரலாறு, இந்த படத்தில் தத்ரூபமாகவும் மிகவும் அழகாகவும் பதிவு செய்யப்பட்டு உள்ளது.