சினிமா செய்திகள்

ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் தயாராகிறது + "||" + Ramarajan and Kanaka acted in the scoring record, The second part of the "karakattakkaran" is prepared

ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் தயாராகிறது

ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் தயாராகிறது
ராமராஜன், கனகா நடித்து வசூல் சாதனை நிகழ்த்திய ‘கரகாட்டக்காரன்’ 2-ம் பாகம் தயாராக உள்ளது.

தமிழில் வெற்றி பெற்ற படங்களின் இரண்டாம் பாகங்களை படமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. எந்திரன், விஸ்வரூபம், பில்லா, சண்டக்கோழி, வேலை இல்லா பட்டதாரி, நான் அவனில்லை, டார்லிங், திருட்டுப்பயலே, கலகலப்பு, நீயா உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்கள் வந்துள்ளன.

சூர்யாவின் சிங்கம், லாரன்சின் காஞ்சனா 3 பாகங்களாக வெளியானது. தற்போது இந்தியன், இரும்புத்திரை, ஆயிரத்தில் ஒருவன், தேவர் மகன், முதல்வன் உள்ளிட்ட பல படங்களின் இரண்டாம் பாகங்களை எடுக்கும் முயற்சிகள் நடக்கின்றன. இந்த வரிசையில் கரகாட்டக்காரன் படத்தின் இரண்டாம் பாகமும் தயாராகிறது.

கங்கை அமரன் இயக்கத்தில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகியோர் நடித்து 1989-ல் கரகாட்டக்காரன் திரைக்கு வந்து வசூல் சாதனை நிகழ்த்தியது. படத்தில் இடம்பெற்ற இந்தமான் உங்கள் சொந்தமான், குடகுமலை காற்றில் வரும் பாட்டு கேட்குதா, மாங்குயிலே பூங்குயிலே, ஊருவிட்டு ஊருவந்து, பாட்டாலே புத்தி சொன்னான் உள்ளிட்ட இனிமையான பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன.

கவுண்டமணி, செந்தில், கோவை சரளா ஆகிய 3 பேரின் நகைச்சுவை காட்சிகள் இப்போதும் ரசிக்கப்பட்டு வருகின்றன. வாழைப்பழ காமெடி தியேட்டரையே குலுங்க வைத்தது. கங்கை அமரன் கூறும்போது, “கரகாட்டக்காரன் 2-ம் பாகம் எடுப்பது குறித்து ராமராஜன் மற்றும் படத்தில் நடித்த நடிகர், நடிகைகளிடம் பேசி வருகிறோம். இப்போதைய நடிகர்களில் யாரை நடிக்க வைக்கலாம் என்ற ஆலோசனையும் நடக்கிறது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்” என்றார்.