சினிமா செய்திகள்

டீ குடிக்கிற கேப்ல போட்ட வடிவேலு காமெடி போஸ்ட் ட்ரெண்டானது + "||" + Tea drinking cabla Vadivelu Kamadhi Post Pray_for_Neasamani

டீ குடிக்கிற கேப்ல போட்ட வடிவேலு காமெடி போஸ்ட் ட்ரெண்டானது

டீ குடிக்கிற கேப்ல போட்ட வடிவேலு காமெடி போஸ்ட் ட்ரெண்டானது
நடிகர் வடிவேலு தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியில் நேசமணி போன்ற கதாபாத்திரங்களுக்கு கிடைக்கும் மவுசு ஆண்டவன் தந்த பரிசு என கூறினார்.
பாகிஸ்தானின் கட்டுமான நிறுவனம் ஒன்று, சுத்தியல் ஒன்றின் படத்தினை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு இதற்கு தமிழில் பெயர் என்ன? என கேட்டிருந்தது. 

இதற்கு குறும்புக்கார நெட்டிசன் விக்னேஷ் பிரபாகர் என்பவர் பதில் அளிக்கையில், 'இதன் பெயர் சுத்தியல். இது விழுந்தால் டாங், டாங் என சத்தம் கேட்கும். இது காண்டிராக்டர் நேசமணியின் தலையில் விழுந்ததால், அவர்  உயிருக்கு போராடிக் கொண்டிருக்கிறார்' என கூறியிருக்கிறார். 

அவரை தொடர்ந்து மற்ற நெட்டிசன்களும் தொடர்ந்து பதிலளிக்கவே ஒரு கட்டத்தில், '#Pray_for_Nesamani' எனும் ஹேஷ்டாக்கினை உருவாக்கி அதனை பரப்ப ஆரம்பித்தனர். இதுதான் இன்றைய டாப் டிரெண்டிங். இந்த நேசமணி யார்? 10 வருடங்களுக்கு முன் ப்ரண்ட்ஸ் திரைப்படத்தில் நடித்த நம்ம வைகைப்புயல் வடிவேலுதான். 

நடிகர் சூர்யாவிடம் வேலை செய்ய சொல்லும்போது, ரமேஷ் கண்ணா மாடியில் ஆணியை கழற்றிக் கொண்டிருப்பார்.அப்போது  கை தவறி சுத்தியலை நேசமணி (வடிவேலு) தலையில் போடவே, அவர் மயங்கி கீழே விழுந்து விடுவார். இந்த சீனை வைத்துதான் நெட்டிசன்கள் தேசிய அளவில் நேசமணிக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.

ப்ரண்ட்ஸ் படம் வெளியாகி 10 வருடங்கள் கடந்தாலும், இன்றளவும் இப்படத்தின் காமெடிகள், வசனங்கள் நம் மனதில் நீங்கா இடம் பெற்றிருப்பது உண்மைதான் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த டிரெண்டிங் ஹேஷ்டாக் இருக்கிறது.

மேலும் பல நெட்டிசன்கள், வடிவேலுவின்  பல்வேறு  புகைப்படங்களை வெளியிட்டு, 'நேசமணி குணமாகும் வரை உண்ணாவிரதம்', 'நேசமணி குணமடைய மண்சோறு சாப்பிடுகிறோம்', 'நேசமணி நன்றாக வரும்வரை உலக கோப்பை நடக்காது'. 

'நேசமணி எங்கள் உயிர்மூச்சு, நேசமணி குணமடைந்து வருகிறார். இப்போது தேறி விட்டார். அவர் நலனை காண லண்டனில் இருந்து மருத்துவர்கள் வந்துள்ளனர்' என சமூக வலைத்தளத்தை கலக்கி வருகின்றனர்.

இதுகுறித்து நடிகர் வடிவேலு தனியார் தொலைக்காட்சி   ஒன்றுக்கு அளித்த பேட்டியில்  நேசமணி போன்ற கதாபாத்திரங்களுக்கு கிடைக்கும்  மவுசு ஆண்டவன் தந்த பரிசு என கூறினார்,

“டீ குடிக்கிற கேப்ல போட்ட போஸ்ட், World Level ட்ரெண்டாகும்னு நெனச்சுப்பாக்கவே இல்ல...!”என  இந்த நேசமணி போஸ்ட்டை போட்ட விக்னேஷ் பிரபாகர் கூறி உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்கு
முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேருவின் குடும்பம் குறித்து ஆட்சேபனைக்குரிய வகையில் கருத்து பதிவிட்டதாக இந்தி நடிகை பாயல் ரோஹத்கி மீது ராஜஸ்தான் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
2. "நடித்துவிட்டு மட்டும் போங்கள்... வாயைத் திறந்து பேசாதீங்க" நடிகர் விஜய் குறித்து இயக்குநர் சாமி சர்ச்சை பேச்சு
நடித்துவிட்டு மட்டும் போங்கள்... வாயைத் திறந்து பேசாதீங்க என்று இயக்குநர் சாமி பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி உள்ளது.
3. சிறுத்தை சிவா இயக்கத்தில் ரஜினியின் 168-வது படம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினியின் 168-வது படம்... இயக்குநர் இவரா?... அதிகாரப்பூர்வ அறிவிப்பு
4. எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன- நடிகை கங்கனா ரனாவத்
எனக்கும் ஜெயலலிதாவுக்கும் நிறைய ஒற்றுமைகள் உள்ளன என நடிகை கங்கனா ரனாவத் கோவையில் பேட்டி அளித்தார்.
5. 2002 முதல் 2016 வரை: மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை ஜூலி வழக்கு சினிமாவாக எடுக்க போட்டாபோட்டி
2002 முதல் 2016 வரை மட்டன் சூப்பில் சயனைடு கலந்து 6 பேர் கொலை செய்த ஜூலியின் வழக்கு சினிமாவாக எடுக்க போட்டி நிலவுகிறது.

ஆசிரியரின் தேர்வுகள்...