சினிமா செய்திகள்

காஜல் அகர்வால் படம், ரூ.8 கோடி நஷ்டம் + "||" + Kajal Aggarwal film Rs 8 crore loss

காஜல் அகர்வால் படம், ரூ.8 கோடி நஷ்டம்

காஜல் அகர்வால் படம், ரூ.8 கோடி நஷ்டம்
இந்தி குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் கோமாளி படத்தில் நடிக்கிறார்.
காஜல் அகர்வால் தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இந்தி குயின் படத்தின் தமிழ் பதிப்பான பாரிஸ் பாரிஸ் படத்தில் நடித்து முடித்துள்ளார். ஜெயம்ரவியுடன் கோமாளி படத்தில் நடிக்கிறார். கமல்ஹாசன் ஜோடியாக இந்தியன்-2 படத்தில் நடிக்கவும் ஒப்பந்தமாகி உள்ளார்.


இந்த நிலையில் தெலுங்கில் பெல்லம் கொண்ட சீனிவாஸ் ஜோடியாக காஜல் அகர்வால் நடித்துள்ள சீதா படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த படம் வெற்றி பெற்று தெலுங்கில் மேலும் படவாய்ப்புகள் வரும் என்று காஜல் அகர்வால் நம்பினார். ஆனால் அந்த படம் எதிர்பாராதவிதமாக தோல்வி அடைந்துள்ளது.

சீதா படத்தை ரூ.15 கோடிக்கு வியாபாரம் செய்து இருந்தனர். படம் தோல்வியானதால் படத்தை வாங்கியவர்களுக்கு ரூ.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது காஜல் அகர்வாலுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

காஜல் அகர்வாலுக்கு தற்போது 33 வயது ஆகிறது. அவருக்கு திருமணம் செய்துவைக்க பெற்றோர் அவசரம் காட்டுவதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே தனது திருமணம் குறித்து காஜல் அகர்வால் அளித்த பேட்டி ஒன்றில், “திருமணம் என்பது ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் முக்கியமானது. எனது வருங்கால கணவரை இதுவரை நான் சந்திக்கவில்லை. காதலிப்பதற்கும் எனக்கு நேரம் இல்லை. முழுகவனமும் சினிமாவில்தான் இருக்கிறது” என்றார்.