சினிமா செய்திகள்

`வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில்4 வேடங்களில், பாபிசிம்ஹா! + "||" + Bobby Simha in 4 roles

`வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில்4 வேடங்களில், பாபிசிம்ஹா!

`வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில்4 வேடங்களில், பாபிசிம்ஹா!
பாபிசிம்ஹா `வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார்.
`நடிகர் திலகம்' சிவாஜிகணேசன், `நவராத்திரி' படத்தில் 9 வேடங்களில் நடித்து சாதனை புரிந்தார். கமல்ஹாசன், `தசாவதாரம்' படத்தில் 10 வேடங்களில் நடித்து சாதித்தார். இவர்களைப்போல் பிரபல நடிகர்கள் 2 மற்றும் 3 வேடங்களில் நடித்து இருக்கிறார்கள். பாபிசிம்ஹா, `வல்லவனுக்கும் வல்லவன்' படத்தில் 4 வேடங்களில் நடித்து இருக்கிறார்.

இந்த படம் விரைவில் திரைக்கு வர இருக்கிறது. பாபிசிம்ஹாவுடன் ஷிவதா, நெப்போலியன், கருணாகரன், ஆனந்தராஜ், சங்கிலிமுருகன், அப்புக்குட்டி ஆகியோரும் நடித்துள்ளனர். விஜய் தேசிங்கு டைரக்டு செய்து இருக்கிறார். ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ், லிப்ரா புரொடக்‌ஷன், அசால்ட் புரொடக்சன் ஆகிய மூன்று பட நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

படப்பிடிப்பு மற்றும் இறுதிகட்ட வேலைகள் முற்றிலும் முடிவடைந்தன. படத்தை விரைவில் திரைக்கு கொண்டுவர ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.