சினிமா செய்திகள்

ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமானவர் கங்கனா ரணாவத் - டைரக்டர் விஜய் + "||" + Kangana Ranawat Suitable for Jayalalitha role - Director Vijay

ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமானவர் கங்கனா ரணாவத் - டைரக்டர் விஜய்

ஜெயலலிதா வேடத்துக்கு பொருத்தமானவர் கங்கனா ரணாவத் - டைரக்டர் விஜய்
ஐஸ்வர்யாராயையும், வித்யாபாலனையும் பரிசீலித்த நிலையில், ஜெயலலிதா வேடத்துக்கு நடிகை கங்கனா ரணாவத் மிகவும் பொருத்தமானவர் என டைரக்டர் விஜய் தெரிவித்துள்ளார்.
டைரக்டர் விஜய் இயக்கிய தேவி-2 படம் திரைக்கு வந்துள்ளது. அவர் சென்னையில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

“பிரபுதேவா, தமன்னாவை வைத்து நான் இயக்கிய தேவி படம் நன்றாக ஓடியதால் அதன் இரண்டாம் பாகத்தை எடுத்தேன். ஒரு மனிதருக்குள் இரண்டு பேய்கள் புகுந்து ஆட்டி படைப்பதுபோல் திரைக்கதை அமைத்தேன். இந்த படத்துக்கு ரசிகர்கள் வரவேற்பு அளித்தால் தேவி 3-ம் பாகம் எடுப்பேன்.


அடுத்து ஜெயலலிதா வாழ்க்கையை படமாக்கும் வேலைகள் தொடங்கி உள்ளன. ஜூலை மாதம் படப்பிடிப்பை தொடங்க இருக்கிறோம். இதில் ஜெயலலிதா வேடத்தில் நடிக்க ஐஸ்வர்யாராய், வித்யாபாலன், கங்கனா ரணாவத் ஆகியோர் பரிசீலிக்கப்பட்டனர். இறுதியில் கங்கனா ரணாவத் பொருத்தமாக இருப்பார் என்று அவரை தேர்வு செய்துள்ளோம்.

ஜெயலலிதாவின் 16 வயதில் இருந்து கதை ஆரம்பிக்கும். அந்த வயதிலேயே அவர் நடிக்க வந்துவிட்டார். இளம் வயது ஜெயலலிதா வேடத்துக்காக எடையை குறைத்தும் பிறகு கூட்டியும் கங்கனா ரணாவத் நடிக்க உள்ளார். படத்துக்காக அவர் தமிழ் கற்றும் வருகிறார். இந்த படம் முடிய ஒன்றரை வருடம் ஆகும். ஆணாதிக்க சமுதாயத்தில் ஒரு பெண் ஜெயித்து அந்த ஆண்களை எப்படி ஆதிக்கம் செய்தார் என்பதே படத்தின் கருவாக இருக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

நடிகை தமன்னா கூறும்போது, “விஜய் இயக்கத்தில் தேவி-2 படத்தில் நடித்தது இனிமையான அனுபவம். முதல் பாகத்தை விட 2-ம் பாகத்தில் நடிப்பு திறமையை வெளிப்படுத்த அதிக வாய்ப்பு இருந்தது. கதைக்கு தேவை என்பதால் ஒரு காட்சியில் கவர்ச்சி நடனம் ஆடினேன். பொருத்தமான மணமகன் கிடைத்தும் திருமணம் செய்துகொள்வேன். ஜெயலலிதா வாழ்க்கை படத்தில் நடிக்க ஆர்வம் உள்ளது. தயாரிப்பாளராக எண்ணம் இல்லை” என்றார்.