சினிமா செய்திகள்

கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி படம் தேர்வு + "||" + Vijay Sethupathi film Select to be screened at Canada Film Festival

கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி படம் தேர்வு

கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி படம் தேர்வு
கனடா பட விழாவில் திரையிட நடிகர் விஜய் சேதுபதியின் படம் தேர்வாகி உள்ளது.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, பகத் பாசில், ரம்யாகிருஷ்ணன், மிஷ்கின் ஆகியோர் நடித்த சூப்பர் டீலக்ஸ் படம் கடந்த மார்ச் மாதம் திரைக்கு வந்தது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு கிடைத்தது. இதில் விஜய் சேதுபதி திருநங்கை கதாபாத்திரத்தில் வந்தார்.


அவரது நடிப்பை திரையுலகினரும், ரசிகர்களும் பாராட்டினர். திருநங்கை தோற்றமும் ரசிக்கப்பட்டது. சூப்பர் டீலக்ஸ் மற்ற மொழி திரையுலகினரையும் கவர்ந்தது. இந்த படம் விரைவில் இந்தியில் ரீமேக் ஆக உள்ளது. இந்தி படத்தையும் தியாகராஜன் குமாரராஜாவே டைரக்டு செய்கிறார். நடிகர்-நடிகைகள் தேர்வு நடக்கிறது.

இந்த நிலையில் சூப்பர் டீலக்ஸ் படத்துக்கு தற்போது சர்வதேச அங்கீகாரம் கிடைத்துள்ளது. கனடாவில் உள்ள மோன்ட்ரல் நகரில் நடைபெற உள்ள சர்வதேச பட விழாவில் திரையிட சூப்பர் டீலக்ஸ் படம் தேர்வாகி உள்ளது. இதற்காக பிரபல இந்தி இயக்குனர் அனுராக் காஷ்யப் சூப்பர் டீலக்ஸ் படக்குழுவினருக்கு டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.


தொடர்புடைய செய்திகள்

1. அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி!
அமீர்கான் நடிக்க இருக்கும் ஒரு புதிய இந்தி படத்தில், அவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.
2. கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி
கதாநாயகியின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.
3. இணையதளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா படங்கள் - படக்குழுவினர் அதிர்ச்சி
இணையதளத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகியோரின் படங்கள் வெளியானதால் படக்குழுவினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
4. ஆந்திராவில் திரையிட ‘லட்சுமி என்.டி.ஆர்’ படத்துக்கு கோர்ட்டு தடை
ஆந்திராவில் லட்சுமி என்.டி.ஆர் படத்தினை திரையிட கோர்ட்டு தடை விதித்துள்ளது.