ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியீடு


ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் ராட்சசி படத்தின் ட்ரெய்லர் வெளியீடு
x
தினத்தந்தி 1 Jun 2019 6:04 AM GMT (Updated: 1 Jun 2019 6:04 AM GMT)

ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும் 'ராட்சசி' படத்தின் ட்ரெய்லர் வெளியிடப்பட்டு உள்ளது.

சென்னை,

அறிமுக இயக்குநர் கெளதம்ராஜ் இயக்கத்தில்  ஜோதிகா நடிப்பில் உருவாகி இருக்கும்  படம் 'ராட்சசி'.

இந்தப் படத்தின் இறுதிக்கட்ட பணிகளில் மும்முரமாக இயங்கி வந்த படக்குழு, இன்று காலையில் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளது.

இந்தப் படத்தில் ஜோதிகாவுடன் பூர்ணிமா பாக்யராஜ், சத்யன், ஹரிஷ் பேரடி, கவிதா பாரதி உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

படத்தின் ட்ரெய்லரை தற்போது படக்குழு வெளியிட்டுள்ளது. படத்தில் தலைமையாசிரியையாக வலம் வரும் ஜோதிகா, மாணவர்களிடம் அன்பாகவும் தன் பணியைச் செய்யவிடாமல் தடுக்கும் சமூக விரோதிகளிடம் ராட்சசியாகவும் தனது நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார்.

"தீமை நடக்கிறது என்று சொல்லி அதனை தடுக்காமல் அதன் கூடவே பயணிக்கிறவர்கள் தீமையின் ஒரு பகுதியாகவே ஆகிறார்கள்" என்று ட்ரெய்லரில் ஜோதிகா கூறும் வசனம் சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்து பேசும் படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.




Next Story