சினிமா செய்திகள்

நடிகை டாப்சி வாங்கிய 2 வீடுகள் + "||" + Actress Topsy bought 2 houses

நடிகை டாப்சி வாங்கிய 2 வீடுகள்

நடிகை டாப்சி வாங்கிய 2 வீடுகள்
தமிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடிக்கிறார்.
மிழில் ஆடுகளம், வந்தான் வென்றான், ஆரம்பம், காஞ்சனா-2 உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருந்த டாப்சி இப்போது இந்தியில் அதிக படங்களில் நடிக்கிறார். அமிதாப்பச்சனுடன் நடித்த ‘பிங்க்’ மற்றும் ‘நாம் சபானா’ ஆகிய படங்கள் நல்ல வசூல் பார்த்தன. அமிதாப்பச்சனுடன் நடித்து திரைக்கு வந்த ‘பட்லா’ படமும் ரூ.80 கோடிக்கு மேல் வசூலித்தது.

தற்போது தட்கா, கேம் ஓவர் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். மிஷன் மங்கள், ஷாந்த் கீ ஆங்க் ஆகிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்தி பட வாய்ப்புகள் குவிவதால் மும்பையிலேயே குடியேற திட்டமிட்டு சில மாதங்களுக்கு முன்பு மூன்று படுக்கையறை கொண்ட வீடு வாங்கினார்.

இந்த வீட்டில்தான் இப்போது வசித்து வருகிறார். தற்போது அதே பகுதியில் ரூ.6 கோடிக்கு இன்னொரு புதிய வீட்டையும் வாங்கி இருக்கிறார். இந்த வீட்டின் உள் அலங்கார வேலைகள் இப்போது நடந்து வருகிறது. வீட்டுக்கான விளக்குகள் மற்றும் மரசாமான்களை ஸ்பெயின் மற்றும் தாய்லாந்தில் இருந்து வாங்கி வந்துள்ளார்.

அடுத்து உணவகம் தொடங்கும் முடிவில் இருக்கிறார். இதுகுறித்து அவர் கூறும்போது, “எதிர்காலத்தில் நான் சினிமாவை விட்டு விலகினால் பிற தொழில்கள் கைவசம் இருக்க வேண்டும். அதற்காகத்தான் உணவகம் தொடங்கும் யோசனையில் இருக்கிறேன்” என்றார்.