சினிமா செய்திகள்

அரைகுறை ஆடையில் கவர்ச்சிஅமலாபால் படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு + "||" + Sexy clothes Amala Paul in the film Audit Committee Resistance

அரைகுறை ஆடையில் கவர்ச்சிஅமலாபால் படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு

அரைகுறை ஆடையில் கவர்ச்சிஅமலாபால் படத்துக்கு தணிக்கை குழு எதிர்ப்பு
அமலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.
மலாபால் நடித்து கடந்த வருடம் திரைக்கு வந்த ராட்சசன் படம் நல்ல வசூல் பார்த்தது. தற்போது அதோ அந்த பறவை போல, ஆடை ஆகிய படங்களில் நடித்து வருகிறார். 3 மலையாள படங்களும் கைவசம் வைத்துள்ளார். ஆடை படத்தில் அறைகுறை உடையில் இருப்பதுபோன்ற முதல் தோற்ற புகைப்படம் ஏற்கனவே வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது.

தமிழில் வேறு எந்த நடிகையும் இந்த அளவுக்கு கவர்ச்சியாக வரவில்லை என்று பேசினார்கள். இந்தி நடிகைகளை மிஞ்சும் அளவுக்கு ஆடை குறைப்பு செய்துள்ளதாகவும் விமர்சனங்கள் கிளம்பின. இந்த படத்தில் நடிப்பது குறித்து அமலாபால் கூறும்போது, “வித்தியாசமாக களம் கொண்ட உணர்வுப்பூர்வமான கதை. எனது கதாபாத்திரத்தை கேட்டபோது சிலிர்த்தேன். புதுமாதிரியான படமாக இருக்கும் என்றார்.

தற்போது ஆடை படப்பிடிப்பு நிறைவடைந்து தொழில் நுட்ப பணிகளும் முடிந்த நிலையில் படத்தை தணிக்கை குழுவுக்கு அனுப்பி வைத்தனர். ‘யூ’ அல்லது ‘யூஏ’ சான்றிதழை படக்குழுவினர் எதிர்பார்த்தனர். ஆனால் படத்தை பார்த்த தணிக்கை குழு உறுப்பினர்கள் அதிக ஆபாசம் மற்றும் வன்முறை காட்சிகள் இருப்பதாக ஆட்சேபித்தனர்.

யூ அல்லது யூஏ சான்றிதழ் அளிக்கவும் மறுத்து விட்டனர். அதற்கு பதிலாக ஏ சான்றிதழ் அளிக்க முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது. இந்த படத்தை ரத்னகுமார் இயக்கி உள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...