சினிமா செய்திகள்

வியட்நாமில், ‘பாக்ஸர்’ : 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்த அருண் விஜய்! + "||" + In Vietnam, 'Boxer': Arun Vijay who exercise 8 hours Continuously!

வியட்நாமில், ‘பாக்ஸர்’ : 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்த அருண் விஜய்!

வியட்நாமில், ‘பாக்ஸர்’ : 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்த அருண் விஜய்!
‘தடம்’ படத்தின் வெற்றியை அடுத்து அருண் விஜய் நடிக்கும் புதிய படம், ‘பாக்ஸர்.’ இந்த படத்தை புது டைரக்டர் விவேக் இயக்குகிறார். வி.மதியழகன் தயாரிக்கிறார்.
அருண் விஜய் குத்து சண்டை வீரராக நடிக்கிறார். அவர் திடமான உடற்கட்டுடன் தோன்ற வேண்டும் என்பதற்காக, தினமும் 8 மணி நேரம் தொடர்ந்து உடற்பயிற்சி செய்தபின், படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

படத்தின் கதாநாயகி, ரித்திகாசிங். படத்தில் இவர், விளையாட்டு பத்திரிகை நிருபராக நடிக்கிறார். மேலும் பிரபல நடிகர்-நடிகைகளும் இடம் பெறுகிறார்கள். ஒரு தீய சக்தியை எதிர்த்து போராடும் ஒரு வீரனின் கதை, இது.

படத்தில் இடம் பெறும் சண்டை காட்சிகள், வியட்நாமில் படமாக்கப்பட்டது. சண்டை காட்சிகளை ஸ்டண்ட் மாஸ்டர் பீட்டர் ஹெய்ன் அமைத்து இருந்தார்.

டைரக்டர் விவேக் கூறும்போது, “நிஜ வாழ்க்கையில் தன் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதில் அருண் விஜய் கெட்டிக்காரர் என்று அனைவருக்கும் தெரியும். ‘பாக்ஸர்’ படத்துக்காக அவர் கூடுதல் முயற்சிகளை மேற்கொண்டுள்ளார். படத்தில் இடம் பெறும் அனைத்து கலைஞர் களும் தொழில்முறை ஈடுபாட்டை தாண்டி, உணர்வுப்பூர்வமாக பணிபுரிவதால், ‘பாக்ஸர்’ படம் அடுத்த கட்டத்துக்கு கொண்டு செல்லப்படும் என்று நான் நம்புகிறேன்” என்றார்.