அட்டானமஸ்: என்ன சொல்ல வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்..? - குழப்பத்தில் ரசிகர்கள்...


அட்டானமஸ்: என்ன சொல்ல வருகிறார் ஏ.ஆர்.ரகுமான்..? - குழப்பத்தில் ரசிகர்கள்...
x
தினத்தந்தி 4 Jun 2019 12:15 PM GMT (Updated: 4 Jun 2019 12:15 PM GMT)

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் பதிவிட்டுள்ள டிவிட் ஒன்று, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை

கடந்த சில தினங்களுக்கு முன்பு,   இசையமைப்பாளர் ஏ.ஆர் ரகுமான், மும்மொழி கொள்கை குறித்த விவகாரத்தில், தமிழகத்தில் இந்தி கட்டாயமல்ல... திருத்தப்பட்டது வரைவு!" - அழகிய தீர்வு என சமூகவலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று, 'அட்டானமஸ்' என்ற ஆங்கில வார்த்தையை பதிவிட்டிருக்கிறார். அதன் அர்த்தத்தை கேம்பிரிட்ஜ் ஆங்கில அகராதியில் தெரிந்து கொள்ளலாம் எனவும் அதில் குறிப்பிட்டிருக்கிறார். 

அதில் உள்ள வார்த்தையை அழுத்தினால், 'அட்டானமஸ் என்றால்,  கட்டுப்படுத்த முடியாத ஒரு அமைப்பு' என பொருள் வருகிறது. அதே நேரம்,  சொந்த முடிவுகளை, சுதந்திரமாக எடுத்துக் கொள்ள அதிகாரம் கொண்ட அமைப்பு எனவும் அர்த்தமாகிறது. மும்மொழி கொள்கை குறித்து கருத்து தெரிவித்த ரகுமான், தற்போது எதற்காக அட்டானமஸ் என்ற வார்த்தையை, பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் குழப்பமடைந்துள்ளனர்.  

சிலர் சுயாட்சி கேட்பதாக குறிப்பிட்டு உள்ளனர். தமிழக அரசியலில் அண்ணா காலத்தில் அதிகமாக தன்னாட்சி முழக்கம் எழுப்பப்பட்டது. தற்போது திடீரென ரஹ்மான் இந்த வார்த்தையை பதிவிட்டுள்ளார்.


Next Story