சினிமா செய்திகள்

புதிய பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்சன் + "||" + Robert Pattinson plays the new Batman

புதிய பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்சன்

புதிய பேட்மேனாக நடிக்கும் ராபர்ட் பேட்டின்சன்
புதிய பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
‘பேட்மேன்’ படங்களுக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர். வசூலிலும் சாதனை படைக்கிறது. பேட்மேன் கதாபாத்திரத்தை முதல் தடவையாக 1940-ல் திரையில் கொண்டு வந்தனர். 2005-ல் கிறிஸ்டோபர் இயக்கத்தில் வெளியான ‘பேட்மேன் பிகின்ஸ்’ படத்துக்கு பிறகு இந்த கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்தது.

2008-ல் வெளியான ‘தி டார்க் நைட்’ படம் பேட்மேன் கதாபாத்திரத்தை மேலும் பிரபலப்படுத்தியது. இதில் வில்லனாக வந்த ஜோக்கர் கதாபாத்திரமும் பேசப்பட்டது. அதன்பிறகு ‘தி டார்க் நைட் ரைசஸ்’ என்ற பேட்மேன் படம் வெளியாகி உலகம் முழுவதும் வெற்றிகரமாக ஓடியது. இந்த படங்களில் பேட்மேன் கதாபாத்திரத்தில் கிறிஸ்டியன் பேல் நடித்து இருந்தார்.

அதன்பிறகு ஜான் ஸ்னைடர் இயக்கிய பேட்மேன் சூப்பர்மேன்: டான் ஆப் ஜஸ்டிஸ், ஜஸ்டிஸ் லீக் ஆகிய பேட்மேன் படங்களில் பென் அப்லெக் பேட்மேனாக நடித்து இருந்தார். அடுத்த பேட்மேன் படம் 2021-ம் ஆண்டு ஜூன் 25-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவித்து உள்ளனர். இந்த படத்தில் பேட்மேன் கதாபாத்திரத்துக்கு புதிய நடிகரை தேர்வு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

எனவே பேட்மேனாக யார் நடிக்கப்போகிறார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் புதிய பேட்மேன் படத்தில் ராபர்ட் பேட்டின்சன் பேட்மேனாக நடிக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.