சினிமா செய்திகள்

தடைகளை தாண்டிவிமலின் ‘களவாணி-2’ திரைக்கு வருகிறது + "||" + Vimal's Kalavani-2 Comes to the screen

தடைகளை தாண்டிவிமலின் ‘களவாணி-2’ திரைக்கு வருகிறது

தடைகளை தாண்டிவிமலின் ‘களவாணி-2’ திரைக்கு வருகிறது
களவாணி-2 படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர்.
விமல்-ஓவியா நடித்து 2010-ல் திரைக்கு வந்த ‘களவாணி’ படம் பெரிய வெற்றி பெற்றது. 9 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது தயாராகி உள்ளது. இதிலும் விமல்-ஓவியா நடித்துள்ளனர். சற்குணம் இயக்கினார். இந்த படத்தை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து தடை பெற்றனர்.

போலியான ஆவணங்களை தயார் செய்து படத்தை வெளியிட விடாமல் தடுப்பதாகவும், தனக்கு மிரட்டல்கள் வருவதாகவும் சற்குணம் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் மனு அளித்தார். இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட எதிர்ப்பு தெரிவித்த தயாரிப்பாளர் சிங்காரவேலனை விமல் நேரில் சந்தித்து பேசி சமரச முயற்சியில் ஈடுபட்டார். அப்போது அவருக்கு கொடுக்க வேண்டிய பணத்துக்கு பதிலாக இந்த ஆண்டுக்குள் இரண்டு படங்களில் நடித்து தருவதாக விமல் உத்திரவாத கடிதம் கொடுத்தார். இதைத் தொடர்ந்து வழக்கை வாபஸ் பெற முடிவானது. சமரசம் ஏற்பட்டதை தொடர்ந்து படம் எப்போது திரைக்கு வரும் என்று எதிர்பார்ப்பு நிலவியது.

இந்த நிலையில் களவாணி-2 படம் இந்த மாதம் இறுதியில் திரைக்கு வர இருப்பதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். களவாணி படத்தில்தான் ஓவியா அறிமுகமானார். அதன்பிறகு டி.வி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று பெரிய ரசிகர் பட்டாளத்தை பெற்றார். எனவே அவர் நடித்துள்ள களவாணி-2 படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உள்ளது.