சினிமா செய்திகள்

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த டைரக்டர் + "||" + Director invited Shalu Shammu to bed

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த டைரக்டர்

விஜய் தேவரகொண்டா படத்தில் நடிக்கஷாலு ஷம்முவை படுக்கைக்கு அழைத்த டைரக்டர்
நடிகை ஷாலு ஷம்மு இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி அதிர வைத்துள்ளார்.
நடிகைகள் சில மாதங்களுக்கு முன்பு பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைப்பதாக மீ டூவில் பாலியல் புகார் சொல்லி பரபரப்பு ஏற்படுத்தினர். தமிழ், தெலுங்கு, இந்தி நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் இதில் சிக்கினர். இப்போது நடிகை ஷாலு ஷம்முவும் இயக்குனர் மீது பாலியல் குற்றச்சாட்டு சொல்லி அதிர வைத்துள்ளார்.

இவர் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் கதாநாயகி ஸ்ரீதிவ்யாவின் தோழியாக நடித்தவர். சமீபத்தில் திரைக்கு வந்த மிஸ்டர் லோக்கல் படத்திலும் நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் ஷாலு ஷம்மு கலந்துரையாடி அவர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தபோது, ரசிகர் ஒருவர் மீ டூவால் நீங்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறீர்களா? என்று கேட்டார்.

அதற்கு பதில் அளித்து ஷாலு ஷம்மு கூறியதாவது:-

“ஒரு நடிகையாக எனக்கும் பாலியல் தொல்லைகளை சந்தித்த அனுபவம் இருக்கிறது. அதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்ற தெளிவு எனக்கு இருந்தது. எனவே அதை தாண்டி வந்துவிட்டேன். தொந்தரவு செய்தவர்கள் மீது நான் புகார் கொடுத்தாலும் என்ன பலன் கிடைத்து விடப்போகிறது? அவர்கள் செய்த தவறை மனப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளவா போகிறார்கள்.

சமீபத்தில் விஜய்தேவரகொண்டாவின் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிக்க வேண்டுமானால் தன்னுடன் படுக்கையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று பிரபல இயக்குனர் ஒருவர் என்னை அழைத்தார்”.

இவ்வாறு அவர் கூறினார். இது பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.