சினிமா செய்திகள்

தன்னாட்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான் + "||" + AR Rahman on autonomy

தன்னாட்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான்

தன்னாட்சி குறித்து ஏ.ஆர்.ரகுமான்
சமூக விஷயங்கள் பற்றி கருத்து சொல்வதை தவிர்த்து வந்த இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இப்போது தைரியமாக அதுகுறித்து பேச தொடங்கி உள்ளார்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை வரைவு திட்டத்தில் மும்மொழி கொள்கையை அமல்படுத்தி இந்தி பேசாத மாநிலங்களிலும் இந்தியை திணிக்க முயற்சித்தது.

இதற்கு எதிர்ப்புகள் கிளம்பின. ஏ.ஆர்.ரகுமானும் டுவிட்டர் பக்கத்தில் தனது இசையில் வெளியான ‘இன்னும் கொஞ்ச நேரம் இருந்தால்தான் என்ன’ என்ற பாடலை பஞ்சாப்பை சேர்ந்த சீக்கியர் ஒருவர் பாடும் வீடியோவை வெளியிட்டு பஞ்சாபிலும் தமிழ் பரவுகிறது என்று பதிவிட்டார். இதன்மூலம் இந்தி திணிப்புக்கு மறைமுகமாக அவர் எதிர்ப்பு காட்டியதாக கூறப்பட்டது.

அதன்பிறகு இந்தி மொழி கட்டாயம் இல்லை என்று கல்வி கொள்கையில் திருத்தம் வெளியிட்டதும் அதை வரவேற்ற ஏ.ஆர்.ரகுமான் ‘அழகிய தீர்வு தமிழகத்தில் இந்தி கட்டாயம் அல்ல. திருத்தப்பட்டது’ என்று பதிவிட்டார். இந்த நிலையில் தனது டுவிட்டர் பக்கத்தில் ‘அட்டானமஸ்’ என்ற ஆங்கில வார்த்தையை பகிர்ந்துள்ளார். அதற்கான அர்த்தம் குறித்த ஆங்கில அகராதியையும் இணைத்துள்ளார்.

அதில் அட்டானமஸ் என்பது, ‘தன்னாட்சி,’ ‘யார் தலையீடும் இல்லாமல் நிர்வகித்து கொள்வது’ என்பன போன்ற அர்த்தங்களையும் பகிர்ந்துள்ளார். இது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. எதற்காக இதனை பதிவிட்டார் என்று வலைத்தளத்தில் வலைதள வாசிகள் கேள்வி எழுப்பி வருகிறார்கள்.