சினிமா செய்திகள்

விஷால் அணி பட்டியல் வெளியானதுநடிகர் சங்க தேர்தலில் குஷ்பு, லதா போட்டி + "||" + Khushboo, Latha Competition in Acting Association election

விஷால் அணி பட்டியல் வெளியானதுநடிகர் சங்க தேர்தலில் குஷ்பு, லதா போட்டி

விஷால் அணி பட்டியல் வெளியானதுநடிகர் சங்க தேர்தலில் குஷ்பு, லதா போட்டி
நடிகர் சங்க தேர்தலில் விஷால் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகிறது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள். மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம். இறுதி வேட்பாளர் பட்டியல் அன்று மாலை வெளியாகிறது. இந்த தேர்தலில் மீண்டும் போட்டியிடுவோம் என்று விஷால் அணியினர் அறிவித்து இருந்தனர்.

தற்போது அந்த அணியின் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும் போட்டியிடுகிறார்கள். துணைத்தலைவர் பதவிக்கு கருணாஸ் மீண்டும் நிற்கிறார். இந்த அணியை சேர்ந்த இன்னொரு துணைத்தலைவரான பொன்வண்ணன் போட்டியிடவில்லை.

அவருக்கு பதிலாக பூச்சி முருகன் துணைத்தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார். விஷால் அணி சார்பில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு நடிகைகள் குஷ்பு, லதா ஆகியோர் போட்டியிடுகின்றனர். மேலும் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு கோவை சரளா, ஸ்ரீமன், பசுபதி, ரமணா, நந்தா, தளபதி தினேஷ், சோனியா, குட்டி பத்மினி, பிரேம், ராஜேஷ், மனோபாலா, ஆதி, ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, எம்.ஏ.பிரகாஷ், அஜய்ரத்னம், பிரசன்னா, ஜூனியர் பாலையா, ஹேமச்சந்திரன், நிதின் சத்யா, சரவணன், வாசுதேவன், காந்தி ஆகியோர் போட்டியிடுகிறார்கள்.

விஷாலை எதிர்த்து பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவதாக உதயா அறிவித்து உள்ளார். தேர்தலையொட்டி 23-ந் தேதி அனைத்து படப்பிடிப்புகளும் ரத்து செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.