சினிமா செய்திகள்

வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோபாதுகாவலரை அறைந்த சல்மான்கான் + "||" + Salman Khan slapped guards

வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோபாதுகாவலரை அறைந்த சல்மான்கான்

வலைத்தளத்தில் வைரலாகும் வீடியோபாதுகாவலரை அறைந்த சல்மான்கான்
சல்மான்கான் பாதுகாவலர் கன்னத்தில் ஓங்கி அறைந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
பிரபல இந்தி நடிகர் சல்மான்கான். இவருக்கு 53 வயது ஆகியும் இன்னும் திருமணம் செய்துகொள்ளவில்லை. நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து கிசுகிசுக்கப் படுகிறார். மான் வேட்டை வழக்கிலும் சிக்கினார். அவர் நடித்து திரைக்கு வந்துள்ள ‘பாரத்’ படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் என்றும் எதிர்ப்புகள் கிளம்பின.

இந்த நிலையில் பாரத் படம் வெளியான மும்பை தியேட்டர் ஒன்றுக்கு சல்மான்கான் சென்றார். அங்கு நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் வெளியே வந்தார். அப்போது சல்மான்கானை பார்க்க ஏராளமான ரசிகர்கள் திரண்டு இருந்தனர். அவரை செல்போனில் படம் பிடிக்கவும், வீடியோ எடுக்கவும் முண்டியடித்தனர்.

சில சிறுவர்களும், பெண்களும் பாதுகாவலர்களை மீறி சல்மான்கான் அருகில் சென்று ஏதோ கேட்டனர். அவர்களுக்கு சல்மான்கான் பதில் சொல்லிக்கொண்டு இருந்தார். அப்போது ஒரு பாதுகாவலர் ரசிகர்களை பிடித்து பின்னால் தள்ளினார்.

இதனால் கோபமான சல்மான்கான் பாதுகாவலர் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இதை எதிர்பார்க்காத பாதுகாவலர் அதிர்ச்சி அடைந்தார். கன்னத்தில் அறைந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. பாதுகாவலரை சல்மான்கான் எப்படி அடிக்கலாம்? என்று பலரும் கண்டித்து வருகிறார்கள்.