சினிமா செய்திகள்

ஐதராபாத் படவிழாவில்விஜய் ஆண்டனியை நடனம் ஆட அழைத்த கதாநாயகி! + "||" + Vijay Antony heroine invited to dance

ஐதராபாத் படவிழாவில்விஜய் ஆண்டனியை நடனம் ஆட அழைத்த கதாநாயகி!

ஐதராபாத் படவிழாவில்விஜய் ஆண்டனியை நடனம் ஆட அழைத்த கதாநாயகி!
ஐதராபாத் படவிழாவில் விஜய் ஆண்டனியை மேடைக்கு வந்து நடனம் ஆட கதாநாயகி ஆஷிமா அழைத்தார்.
விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடித்துள்ள புதிய படம், ‘கொலைகாரன்’. இதில், அவருக்கு ஜோடியாக ஆஷிமா நர்வல் அறிமுகமாகிறார். அண்ட்ரூவ்ஸ் டைரக்டு செய்துள்ள இந்த படத்தை பாப்டா நிறுவனம் மூலம் தனஞ்செயன் வெளியிடுகிறார்.

தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் படம் தயாராகி இருக்கிறது. தெலுங்கு படத்துக்கு, ‘கில்லர்’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு ஐதராபாத்தில் நடந்தது. விஜய் ஆண்டனியை மேடைக்கு வந்து நடனம் ஆட கதாநாயகி ஆஷிமா அழைத்தார். முதலில் கூச்ச சுபாவம் காரணமாக விஜய் ஆண்டனி மேடை ஏறி நடனம் ஆட மறுத்தார். பின்னர், அவர் மேடை ஏறி, எல்லோரும் ரசிக்கும் வண்ணம் சிறப்பாக நடனம் ஆடினார்.

‘கில்லர்’ படத்தில் இடம் பிடித்த ‘மெலடி’ பாடலுக்கு ஏற்ப விஜய் ஆண்டனியும், ஆஷிமாவும் நடனம் ஆடினார்கள். இவர்களின் நடனத்துக்கு ஏற்ப, பார்வையாளர்கள் வரிசையில் அமர்ந்திருந்த ரசிகர்களும் நடனம் ஆடினார்கள்.

ஆசிரியரின் தேர்வுகள்...