சினிமா செய்திகள்

மீண்டும் இந்தி படத்தில் தனுஷ் + "||" + Dhanush Back in the Hindi film

மீண்டும் இந்தி படத்தில் தனுஷ்

மீண்டும் இந்தி படத்தில் தனுஷ்
மீண்டும் இந்தி படமொன்றில் தனுஷ் நடிக்க உள்ளார்.
தனுஷ் ஏற்கனவே ஆனந்த் ராய் இயக்கத்தில் ‘ராஞ்சனா’ என்ற இந்தி படத்தில் நடித்து இருந்தார். ஜோடியாக சோனம் கபூர் வந்தார். 2013-ல் இந்த படம் திரைக்கு வந்து வட இந்தியாவில் வெற்றிகரமாக ஓடி வசூல் குவித்தது. அதன்பிறகு அமிதாப்பச்சனுடன் இணைந்து ‘ஷமிதாப்’ என்ற இந்தி படத்திலும் நடித்தார்.

பால்கி இயக்கிய இந்த படத்தில் அக்‌ஷரா ஹாசனும் முக்கிய கதாபாத்திரத்தில் வந்தார். இந்த படமும் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. தற்போது 4  வருடங்களுக்கு பிறகு மீண்டும் இந்தி படமொன்றில் தனுஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தையும் ராஞ்சனா படத்தை இயக்கிய ஆனந்த் ராயே டைரக்டு செய்கிறார்.

தனுஷ் தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அசுரன் படத்தில் நடித்து வருகிறார். துரை செந்தில்குமார் இயக்கும் பெயரிடப்படாத படமொன்றிலும் நடிக்கிறார். இந்த படங்களை முடித்த பிறகு இந்தி படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளார். தனுஷ் நடித்துள்ள ஹாலிவுட் படமான ‘த எக்ஸார்டினரி ஜர்னி ஆப் த பகிர்’ படம் தமிழில் ‘பக்கிரி’ என்ற பெயரில் விரைவில் திரைக்கு வருகிறது.