சினிமா செய்திகள்

தமிழ் பட வில்லன் நடிகர் மீது பாலியல் புகார் + "||" + Tamil film villain on sexual harassment compliant

தமிழ் பட வில்லன் நடிகர் மீது பாலியல் புகார்

தமிழ் பட வில்லன் நடிகர் மீது பாலியல் புகார்
வில்லன் நடிகர் விநாயகன் பாலியல் குற்றச்சாட்டில் சிக்கி உள்ளார்.
தமிழில் விஷால் நடித்து திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்தவர் விநாயகன். அந்த படத்தில் ஸ்ரேயா ரெட்டியின் கையாளாக ஒரு காலை நொண்டியபடி நடித்து இருந்தார். அந்த கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பேசப்பட்டது. மலையாளத்தில் அதிகமான படங்களில் வில்லனாகவும், குணசித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார்.

சமீபத்தில் விநாயகன் பா.ஜனதா கட்சிக்கு எதிரான கருத்தை கூறி சர்ச்சையில் சிக்கினார். இதன் மூலம் சமூக வலைத்தளத்தில் நிறம் மற்றும் சாதிய ரீதியான தாக்குதலுக்கு ஆளானார். இந்த நிலையில் விநாயகன் தற்போது பாலியல் குற்றச்சாட்டிலும் சிக்கி உள்ளார். கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவி அவர் மீது செக்ஸ் புகார் தெரிவித்து உள்ளார்.

இதுகுறித்து அவர் கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்துகொள்வதற்காக விநாயகனை செல்போனில் தொடர்புகொண்டு அழைத்தேன். அப்போது என்னிடம் ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை மட்டுமின்றி எனது தாயும் அவர் விருப்பத்துக்கு ஏற்ப ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என்று பாலியல் ரீதியாக வற்புறுத்தினார்.

இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது. அதேநேரம் விநாயகனுக்கு எதிரான சாதிய, நிறவெறி தாக்குதலை நான் கண்டிக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.