சினிமா செய்திகள்

“கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன்?”நடிகை டாப்சி பேட்டி + "||" + Actress Taapsee Interview

“கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன்?”நடிகை டாப்சி பேட்டி

“கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பது ஏன்?”நடிகை டாப்சி பேட்டி
டாப்சி கதாநாயகியாக நடித்த ‘கேம் ஓவர்’ படத்தை அஸ்வின்குமார் டைரக்‌ஷனில், சசிகாந்த் தயாரித்து இருக்கிறார். இந்த படக்குழுவினர், சென்னையில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்கள்.
நடிகை டாப்சியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அவற்றுக்கு அவர் அளித்த பதில்களும் வருமாறு;-

கேள்வி:- ‘கேம் ஓவர்’ படத்தில் உங்களுக்கு என்ன வேடம்?

பதில்:- ‘வீடியோ கேம்’ டிசைனராக நடித்து இருக்கிறேன்.

கேள்வி:- இந்தி பட உலகுக்கு சென்றது ஏன்? அதிக சம்பளம் கொடுக்கிறார்கள் என்பதற்காகவா?

பதில்:- அதிக சம்பளம் மட்டுமே காரணம் அல்ல. பெரும்பாலும் எல்லா கதாநாயகிகளுமே இந்தி படத்தில் நடிக்க ஆசைப்படுவார்கள். நானும் அதற்கு விதிவிலக்கு அல்ல.

கேள்வி: உங்களை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைக்கிறார்களாமே..?

பதில்:- அப்படி என்னை அழைப்பது தவறு. அந்த பட்டம் எல்லா வகையிலும் நயன்தாராவுக்குத்தான் பொருந்தும். நான் திரையுலகுக்கு வந்து 7 வருடங்கள்தான் ஆகிறது. அவர் 15 வருடங்களாக நடித்துக் கொண்டிருக்கிறார். நான் ஒரு படத்துக்கு, ரூ.2.20 கோடிதான் வாங்குகிறேன். அவர் ஐந்தாறு கோடி வாங்குவதாக கேள்விப்படுகிறேன். கதாநாயகர்களுக்கு இணையான ‘மார்க்கெட்’ அவருக்கு இருக்கிறது.

கேள்வி: கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுக்கப்படுவது பற்றி உங்கள் கருத்து?

பதில்:- கதாநாயகிகளை விட, கதாநாயகர்களுக்கு அதிக சம்பளம் கொடுப்பதில் நியாயம் இருக்கிறது. அவர்களை வைத்துத்தான் வியாபாரம் நடக்கிறது.

கேள்வி: உங்களுக்கு மும்பையில் ஐந்தாறு வீடுகள் இருக்கிறதாமே... உண்மையா?

பதில்:- அய்யய்யோ... ஒரே ஒரு வீடுதான் வாங்கியிருக்கிறேன். அதையும் ரொம்ப கஷ்டப்பட்டு வாங்கினேன்.

கேள்வி: ‘கேம் ஓவர்’ படத்தில் வீல் சேரிலேயே அமர்ந்து நடித்த அனுபவம் எப்படியிருந்தது?

பதில்:- ரொம்ப கஷ்டமாக இருந்தது. சில நாட்களில் 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வீல் சேரில் அமர்ந்து நடித்து இருக் கிறேன்.”

இவ்வாறு டாப்சி கூறினார்.