அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சங்கம் உள்ளது: அரசியல் சாயத்தை பூச வேண்டாம் - விஷால்


அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சங்கம் உள்ளது: அரசியல் சாயத்தை பூச வேண்டாம் - விஷால்
x
தினத்தந்தி 8 Jun 2019 12:14 PM GMT (Updated: 8 Jun 2019 1:04 PM GMT)

அரசியலுக்கு அப்பாற்பட்டு நடிகர் சங்கம் உள்ளது. அரசியல் சாயத்தை பூச வேண்டாம் என நடிகர் விஷால் கேட்டு கொண்டுள்ளார்.

சென்னை,

நடிகர் சங்க தேர்தலில் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிட வேட்பு மனுத்தாக்கல் செய்தார் விஷால். செயற்குழு உறுப்பினர் பதவிக்கு, பாண்டவர் அணி சார்பில் மனோபாலா மற்றும் குஷ்பு மனுத்தாக்கல் செய்தனர்.

பின்னர் விஷால் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-

நடிகர் சங்க கட்டடம் கட்டும் பணி நிச்சயம் நிறைவேறும். 6 மாதத்தில் கட்டடம் கட்டி முடிக்கப்படும். நடிகர்களின் ஓய்வூதியம் அதிகரித்து வழங்கப்படும்.

அரசியலுக்கு  அப்பாற்பட்டு நடிகர் சங்கம் உள்ளது. அரசியல் சாயத்தை பூச வேண்டாம். கடந்த முறை கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டது என கூறினார்.

Next Story