சினிமா செய்திகள்

சாமி சிலை முன்பு கவர்ச்சி ‘போஸ்’ - நடிகை யாஷிகாவுக்கு எதிர்ப்பு + "||" + Sexy 'Pose' before the Sami statue - opposite to actress Yashika

சாமி சிலை முன்பு கவர்ச்சி ‘போஸ்’ - நடிகை யாஷிகாவுக்கு எதிர்ப்பு

சாமி சிலை முன்பு கவர்ச்சி ‘போஸ்’ - நடிகை யாஷிகாவுக்கு எதிர்ப்பு
சாமி சிலை முன்பு கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை யாஷிகா ஆனந்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

தமிழில் கவலை வேண்டாம், துருவங்கள் பதினாறு உள்ளிட்ட படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். இருட்டு அறையில் முரட்டு குத்து படத்தில் அரைகுறை ஆடையில் கவர்ச்சியாக வந்து பரபரப்பு ஏற்படுத்தினார். நோட்டா, கழுகு-2 படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஓடவும் முடியாது ஒளியவும் முடியாது, ஜோம்பி, ராஜ பீமா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றும் பிரபலமானார். யாஷிகா ஆனந்த் தனது வலைத்தள பக்கத்தில் அடிக்கடி கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இதனால் அவரை சிலர் தமிழகத்தின் மியா கலிபா என்றனர். அவர்களுக்கு வலைத்தளத்தில் கடுமையான பதிலடி கொடுத்தார். எதிர்ப்பு, விமர்சனங்களை பொருட்படுத்தாமல் தொடர்ந்து கவர்ச்சி படங்களை பதிவிட்டு வருகிறார்.

இந்த நிலையில் புதிதாக அவர் வெளியிட்டுள்ள ஒரு கவர்ச்சி புகைப்படம் கடும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அந்த புகைப்படத்துக்கு பின்னால் விநாயகர் சிலை இருப்பதே இதற்கு காரணம். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது. படத்தை 85 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்த்துள்ளனர்.

சாமி சிலைக்கு முன்னால் நின்று கவர்ச்சி போஸ் கொடுப்பதா? என்று யாஷிகாவை பலரும் கண்டித்து வருகிறார்கள். இதுபோன்ற செயலை அனுமதிக்க முடியாது என்றும் கூறியுள்ளனர். இன்னும் சிலர் யாஷிகாவுக்கு ஆதரவாகவும் கருத்து பதிவிட்டுள்ளனர். இந்த புகைப்படம் வலைத்தளத்தில் கடும் விவாதமாக மாறி உள்ளது.