சினிமா செய்திகள்

திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து + "||" + Sreereddy Controversy is comment about marriage

திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து

திருமணம் குறித்து ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்து
தனது திருமணம் குறித்து நடிகை ஸ்ரீரெட்டி சர்ச்சை கருத்தினை தெரிவித்துள்ளார்.

பாலியல் புகாரில் நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்களை விளாசி தள்ளி பட உலகில் பரபரப்பை ஏற்படுத்தியவர் ஸ்ரீரெட்டி. ஐதராபாத்தில் ஆடை அவிழ்ப்பு போராட்டம் நடத்தியும் அதிர வைத்தார். தற்போது சென்னையில் குடியேறி இருக்கிறார். ஸ்ரீரெட்டியின் வாழ்க்கை ரெட்டி டைரி என்ற பெயரில் படமாகிறது.

இதில் படுக்கைக்கு அழைத்தவர்களை காட்சிப்படுத்துகின்றனர். இதனால் மிரட்டல்கள் வருவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். ஸ்ரீரெட்டி சமூக வலைத்தளத்தில் தொடர்ந்து கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில் தனது திருமணம் குறித்து சர்ச்சை கருத்தை தற்போது பதிவிட்டுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-

“எனது பெற்றோர் மீது மட்டுமே என்னால் அன்பு செலுத்த முடியும். வேறு யாரிடமும் அன்பு காட்ட முடியாது. எனக்கு ஒருவரை பிடித்து இருந்தால் அவருடன் ஒரு வருடம் சேர்ந்து ‘டேட்’ செய்வேன். அதன்பிறகு அவர் மீது எனக்கு போராடித்து விடும். அதனால்தான் எனக்கு திருமணம் செய்து கொள்வது பிடிக்கவில்லை.

எனக்கு ஒவ்வொரு முறையும் புதிது புதிதாக காதல் வேண்டும். டிராமா இல்லை. குழப்பம் இல்லை. உண்மையான பெண்” என்று கூறியுள்ளார்.

ஸ்ரீரெட்டியின் கருத்து சமூக வலைத்தளத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சிலர் அதனை வரவேற்றும் இன்னும் சிலர் கண்டித்தும் பேசி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. அரசியலுக்கு வரும் ஸ்ரீரெட்டி
நடிகை ஸ்ரீரெட்டி அரசியலுக்கு வர உள்ளதாக தெரிவித்துள்ளார்.
2. பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து: உத்தரபிரதேச மந்திரி அதிரடி நீக்கம்
பா.ஜனதாவினர் குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த உத்தரபிரதேச மந்திரி நீக்கம் செய்யப்பட்டார்.
3. “பிணவறையில் தந்தை-மணவறையில் மகள்” துக்கத்தை மறைத்து சகோதரியின் திருமணத்தை நடத்திய அண்ணன்
திருச்சி அருகே மருத்துவமனையில் இறந்த தனது தந்தையின் உடலை பிணவறையில் வைத்துவிட்டு, அவர் இறந்த தகவலை மறைத்து, தனது தங்கையை மணவறையில் ஏற்றி அவருடைய திருமணத்தை வாலிபர் ஒருவர் நடத்திய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
4. கோட்சே குறித்து சர்ச்சை கருத்து: பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை -அமித்ஷா எச்சரிக்கை
கோட்சே குறித்து சர்ச்சை கருத்து கூறிய பா.ஜனதா நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அமித்ஷா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
5. வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து: மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - காங்கிரஸ் கட்சி வலியுறுத்தல்
வயநாடு தொகுதி குறித்து சர்ச்சை கருத்து தெரிவித்த பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.