சினிமா செய்திகள்

ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’ + "||" + Rajini's '2.0' release in Russia

ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’

ரஷியாவில் வெளியாகும் ரஜினியின் ‘2.0’
ரஷியாவில் ரஜினியின் ‘2.0’ திரைப்படம் வெளியாக உள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், அக்‌ஷய்குமார், எமி ஜாக்சன் ஆகியோர் நடித்து 3டி தொழில் நுட்பத்தில் தயாரான 2.0 படம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது. ரூ.500 கோடிக்கு மேலான செலவில் இந்த படத்தை எடுத்து இருந்தனர். ரூ.800 கோடிக்கு அதிகமாக வசூல் ஈட்டியது.


2.0 படத்தை சீனாவை தவிர்த்து உலகம் முழுவதும் திரையிட்டனர். அனைத்து நாடுகளிலுமே நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே அடுத்து சீனாவிலும் சீன மொழியில் டப்பிங் செய்து 2.0 படத்தை வெளியிடுவதற்கான பணிகளை தொடங்கி உள்ளனர். அங்கு 10 ஆயிரம் தியேட்டர்களில் திரையிடுகின்றனர்.

ஏற்கனவே விஜய் நடித்த மெர்சல் படமும் சீனாவில் வெளியாகி வரவேற்பை பெற்றது. அமீர்கான் நடித்த 3 இடியட்ஸ், தங்கல், பிகே இந்தி படங்களும் சீனாவில் வெளியாகி வசூல் குவித்தன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சீனாவை தொடர்ந்து ரஷியாவிலும் ‘2.0’ படத்தை திரையிட உள்ளதாக படக்குழுவினர் அறிவித்து உள்ளனர். அங்கு அடுத்த மாதம் (ஜூலை) 12-ந்தேதி 2.0 வெளியாக இருக்கிறது. ரஷிய மொழியில் டப்பிங் செய்து வெளியிடுகின்றனர். விரைவில் 2.0 படத்தின் ரஷிய மொழி டிரைலரையும் வெளியிட இருக்கிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. “ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள்” - ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை
ஜனாதிபதி தேர்தலில் தலையிடாதீர்கள் என ரஷியாவுக்கு டிரம்ப் கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
2. புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியா? - நடிகை மீனா விளக்கம்
புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக வெளியாக தகவல் குறித்து நடிகை மீனா விளக்கம் அளித்துள்ளார்..
3. ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்து: 15 பேர் பலி
ரஷ்யாவில் ஆற்றில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 15 பேர் பலியானார்கள்.
4. ரஷியாவில் சோகம்: வெந்நீர் குழாயில் விழுந்த கார் - 2 பேர் உடல் வெந்து சாவு
ரஷியாவில் வெந்நீர் குழாயில் கார் ஒன்று விழுந்தது. இதில் இருந்த 2 பேர் உடல் வெந்து உயிரிழந்தனர்.
5. ரஷியாவில் வினோதம்: நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவச பெட்ரோல் - பெண்களை விட ஆண்கள் அதிகம் குவிந்தனர்
ரஷியாவில் நீச்சல் உடையில் வருபவர்களுக்கு இலவசமாக பெட்ரோல் வழங்கப்படும் என்ற வினோத சலுகை அறிவிக்கப்பட்டது.