சினிமா செய்திகள்

சரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் + "||" + Mammootty, Mohanlal, Prithviraj in historical films

சரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ்

சரித்திர படங்களில் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ்
நடிகர் மம்முட்டி, மோகன்லால், பிரித்விராஜ் ஆகியோர் சரித்திர படங்களில் நடிக்க உள்ளனர்.

பாகுபலி வெற்றிக்கு பிறகு மலையாளத்தில் அதிகமான சரித்திர, புராண படங்கள் தயாராகின்றன. பிரித்விராஜ் கர்ணன் புராண படத்தில் நடிக்க உள்ளார். கர்ணன் கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இதுபோல் மோகன்லால் மகாபாரதம் கதையில் நடிக்கிறார்.


இந்த படத்தில் பீமன் கதாபாத்திரத்தில் அவர் நடிக்க உள்ளார். இதன் படப்பிடிப்பும் விரைவில் தொடங்க உள்ளது. இதர நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது. இதுபோல் மம்முட்டி ‘மாமாங்கம்’ என்ற சரித்திர கதையில் நடிக்கிறார். கேரளாவில் நடைபெற்று வரும் புகழ்பெற்ற மாமாங்கம் திருவிழாவை மையமாக வைத்து இந்த படம் உருவாகிறது. மலபாரை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை.

இதில் பிராச்சி தேசாய், உன்னி முகுந்தன், மாளவிகா மேனன், பிராச்சி தேஹ்லன் ஆகியோரும் நடிக்கின்றனர். சஜீவ் பிள்ளை இயக்குவதாக இருந்தது. பிறகு அவரை மாற்றி விட்டு பத்மகுமாரை டைரக்டராக ஒப்பந்தம் செய்தனர்.

தற்போது மாமாங்கம் படத்தில் மம்முட்டியின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர்.

மற்ற மாநிலங்களிலும் மம்முட்டிக்கு மார்க்கெட் உள்ளதால் இந்த படத்தை மலையாளம் மட்டுமன்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் உருவாக்கி வருகிறார்கள். ரூ.30 கோடி பட்ஜெட்டில் தயாராகிறது. இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.