சினிமா செய்திகள்

கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் + "||" + Veteran Tamil playwright and actor Crazy Mohan dies at 67

கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்

கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல்
கிரேசி மோகன் மறைவுக்கு முதல்வர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நாடக ஆசிரியர், நடிகர், கதாசிரியர், வசனகர்த்தா என பன்முகம் கொண்ட கிரேசி மோகன் இன்று சென்னையில் மாரடைப்பால் உயிரிழந்தார். அவருக்கு வயது 66. அவருடைய மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள செய்தியில், கிரேசி மோகனின் கலையுலக சேவையை பாராட்டி அரசு அவருக்கு கலைமாமணி விருது வழங்கி கவுரவித்துள்ளது. அனைவரிடமும் அன்பாக பழகக்கூடியவர், நாடகத்துறை, திரைத்துறையில் தனி முத்திரை பதித்தவர். கிரேசி மோகனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துகொள்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.