சினிமா செய்திகள்

பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி + "||" + Cine artists paid tribute to popular drama actor Crazy Mohan

பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி

பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி
பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் உடலுக்கு திரையுலகினர் அஞ்சலி செலுத்தினர்.
சென்னை,

பிரபல நாடக நடிகர் கிரேசி மோகன் (வயது 67).  புகழ் பெற்ற வசனகர்த்தாவான இவர், நாடக ஆசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.  நடிகர் கமல்ஹாசன் 3 வேடங்களில் நடித்த அபூர்வ சகோதரர்கள் திரைப்படத்திற்கு வசனம் எழுதினார்.  இந்த படம் நல்ல வரவேற்பினை பெற்றது.

தொடர்ந்து அவர், மைக்கேல் மதன காமராசன், ஆஹா, காதலா காதலா, பஞ்சதந்திரம், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ். உள்ளிட்ட படங்களுக்கு கதை, வசனம் எழுதியுள்ளார்.  இவர் பணியாற்றிய படங்களில் நகைச்சுவை அதிகம் இருக்கும் வகையில் எழுதுவதில் சிறப்பு பெற்றவர்.

அவருக்கு நேற்று திடீரென உடல் நல குறைவு ஏற்பட்டது.  இதனால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார்.  எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று மதியம் 2 மணியளவில் அவர் காலமானார்.

அவரது உடல் மந்தைவெளியில் உள்ள இல்லத்தில் இருந்து ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்படுகிறது.  இதன்படி, மறைந்த நடிகரும், நாடக ஆசிரியருமான கிரேசி மோகனின் உடலுக்கு இறுதி சடங்கு நடந்தது.

இதில் மக்கள் நீதி மய்ய தலைவர் மற்றும் நடிகரான கமல்ஹாசன் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.  இதேபோன்று நடிகர்கள் நாசர், சிவக்குமார், நகைச்சுவை நடிகர்கள் காத்தாடி ராமமூர்த்தி, விவேக், கவுண்டமணி, வையாபுரி, மனோபாலா, தாமு, நகைச்சுவை நடிகை கோவை சரளா, கவிஞர் வைரமுத்து, நடிகைகள் கவுதமி, சி.ஆர். சரஸ்வதி உள்ளிட்ட திரையுலகை சேர்ந்த நடிகர், நடிகைகள் மற்றும் கலைஞர்கள் மறைந்த கிரேசி மோகனின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

இதுபற்றி நடிகை கவுதமி கூறும்பொழுது, தமிழக மக்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்தவர்.  அருமையான மனிதர், நல்ல மனது கொண்டவர்.  அவரை இழந்தது மிக பெரிய வேதனை என கூறினார்.  நடிகர் சங்க தலைவர் நாசர் கூறும்பொழுது, அவரது மறைவு செய்தி பேரதிர்ச்சியாக இருந்தது.  நாடகத்துறையில் இருந்து வந்தவர்களில் தனித்துவம் பெற்றவர்.  அவருடன் பணியாற்றியது பெருமையாக உள்ளது.  அவர் மிக அருமையான மனிதர் என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. பிரபல நகைச்சுவை நாடக நடிகர் கிரேசி மோகன் காலமானார்
பிரபல நகைச்சுவை நாடக நடிகரும், புகழ்பெற்ற வசனகர்த்தாவுமான கிரேசி மோகன் காலமானார்.