சினிமா செய்திகள்

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி + "||" + Acting Union Election 3 people's nominations Dismissed

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி

நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி
நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.
சென்னை,

தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு வருகிற 23-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனுதாக்கல் 7-ந் தேதி தொடங்குகியது. மனுதாக்கல் செய்ய 10-ந் தேதி கடைசி நாள் என தெரிவிக்கப்பட்டது. மனுக்களை 14-ந் தேதி வாபஸ் பெற்றுக்கொள்ளலாம்.

இந்த தேர்தலில் நாசர் தலைவர் பதவிக்கும், விஷால் பொதுச்செயலாளர் பதவிக்கும் மீண்டும் போட்டியிடுகிறார்கள். கார்த்தி பொருளாளர் பதவிக்கு நிற்கிறார். நடிகர் நாசரை எதிர்த்து தலைவர் பதவிக்கு பாக்யராஜ்  போட்டியிடுகிறார். விஷாலை எதிர்த்து பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷ் களம் காண்கிறார்.

இந்நிலையில், நடிகர் சங்க தேர்தலில் 3 பேரின் வேட்புமனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நடிகர்கள் ரமேஷ்கண்ணா, விமல், நடிகை ஆர்த்தி கணேஷ் ஆகியோரது மனுக்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது.

சந்தா கட்டாததால் மனுக்கள் நிராகரிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாக்யராஜ் தலைமையிலான சுவாமி சங்கரதாஸ் அணியில் போட்டியிட 3 பேரும் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தகக்து.

தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? -சரத்குமார் பேட்டி
நடிகர் சங்கத் தேர்தலில் யாருக்கு ஆதரவு? என்பது குறித்து நடிகர் சரத்குமார் கூறி உள்ளார்.
2. 3 ஆண்டுகள் எங்கள் வெற்றிகரமான செயல்பாடுகளே எங்கள் தேர்தல் அறிக்கை- பாண்டவர் அணி
3 ஆண்டுகள் எங்கள் வெற்றிகரமான செயல்பாடுகளே எங்கள் தேர்தல் அறிக்கை என பாண்டவர் அணி கூறி உள்ளது.
3. நடிகர் சங்க தேர்தல் பொருளாளர் பதவி : கார்த்தியை எதிர்த்து ஜெயம் ரவி போட்டியா?
நடிகர் சங்க தேர்தல் பொருளாளர் பதவிக்கு கார்த்தியை எதிர்த்து ஜெயம் ரவி போட்டியிடப்போவதாக தகவல் வெளியாகி உள்ளது.
4. நடிகர் சங்க தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல்
நடிகர் சங்க தேர்தலை நடத்துவதற்கான தேர்தல் அதிகாரியாக ஓய்வுபெற்ற நீதிபதி பத்மநாபனை நியமிக்க செயற்குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டு உள்ளது.
5. நடிகர் சங்க தேர்தல்: விஷாலுக்கு எதிராக புதிய அணி
நடிகர் சங்க தேர்தலில், விஷாலுக்கு எதிராக புதிய அணி உருவாக உள்ளது.