சினிமா செய்திகள்

‘சீயான்கள்’ படத்தில் 70 புதுமுகங்கள்! + "||" + 70 newcomers in the Chiyaangal film

‘சீயான்கள்’ படத்தில் 70 புதுமுகங்கள்!

‘சீயான்கள்’ படத்தில் 70 புதுமுகங்கள்!
‘சீயான்கள்’ என்று ஒரு படம் தயாராகி இருக்கிறது.
“மனித உணர்வுகளுக்கு வயது வரம்பே கிடையாது. வாழும் ஒவ்வொரு தருணத்தையும் உணர்வது, வயோதிக பருவத்தில்தான். அப்படி ஒரு தூய்மையான அன்பை அடிப்படையாக வைத்து, ‘சீயான்கள்’ என்ற படம் தயாராகி இருக்கிறது” என்கிறார், இந்த படத்தின் டைரக்டர் வைகறை பாலன்.

இவர் மேலும் கூறியதாவது:- “இந்த படத்தில் 70 புதுமுகங்கள் நடித்துள்ளனர். அவர்கள் அனைவருக்கும் பயிற்சி அளித்து, ஒத்திகை பார்த்து அதன் பிறகே படப் பிடிப்பை நடத்தினோம். தேனியில் இருந்து 40 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஒரு மலை கிராமத்தில் படப்பிடிப்பு நடந்தது.

படக்குழுவினர் அனைவரும் அந்த கிராமத்துக்கு நடந்தே சென்றோம். தினமும் 2 முதல் 3 மணி நேரம் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடிந்தது. சீயான் என்றால் வயதானவர்களை குறிக்கும். இந்த படத்தை கரிகாலன் தயாரித்து இருக்கிறார்” என்றார்.