சினிமா செய்திகள்

ஜீவன் நடிக்கும் அறிவியல் சார்ந்த திகில் படம், ‘அசரீரி’ + "||" + Jeevan Acting Science fiction movie

ஜீவன் நடிக்கும் அறிவியல் சார்ந்த திகில் படம், ‘அசரீரி’

ஜீவன் நடிக்கும் அறிவியல் சார்ந்த திகில் படம், ‘அசரீரி’
நடிகர் ஜீவன் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அசரீரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.
‘காக்க காக்க’ படத்தில் பயங்கர வில்லனாகவும், ‘நான் அவனில்லை,’ ‘திருட்டுப்பயலே,’ ‘தோட்டா’ உள்பட பல படங்களில் கதைநாயகனாகவும் நடித்தவர், ஜீவன். இவர் நடிக்கும் புதிய படத்துக்கு, ‘அசரீரி’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது.

ஐ.பி.கார்த்திகேயன் தயாரிக்கிறார். ஜி.கே. என்ற புதுமுக டைரக்டர் இயக்குகிறார். படத்துக்கு, ‘அசரீரி’ என்று பெயர் சூட்டப்பட்டிருப்பது பற்றி இவர் கூறுகிறார்:-

“அசரீரி என்பது ஒரு நாவல் வாசிப்பு அனுபவத்தை கொடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு அறிவியல் சார்ந்த திகில் படம். நமது கலாசாரத்துடன் மரபு ரீதியான தொடர்பை கொண்ட புராண கதைகளை, இது நினைவூட்டும்.

‘அறிவியல்’ எவ்வாறு ஒரு குடும்பத்துக்குள் உணர்ச்சி போராட்டத்தை உருவாக்குகிறது என்பதை கதை சித்தரிக் கிறது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை, இந்த கதையை ரசிப்பார்கள். கதைகளை தேர்வு செய்து நடிப்பவர், ஜீவன். அவர் இந்த படத்தை ஒப்புக்கொள்வாரா? என்ற சந்தேகம் எங்களுக்கு இருந்தது. அவர் தொழில்நுட்பத்தில் ஆர்வம் கொண்டவர் என்பதால், இந்த கதை அவருக்கு மிகவும் பிடித்துப் போனது. முன்னணி நடிகை ஒருவர், கதாநாயகியாக நடிப்பார். பிரபல நடிகர்-நடிகைகள் பலரும் இதில் நடிக்க இருக்கிறார்கள்” என்றார்.

தயாரிப்பாளர் ஐ.பி.கார்த்திகேயன் கூறும்போது, “இதுபோன்ற அறிவியல் சார்ந்த கதைகளை கேட்கும்போது, இதை டைரக்டர் எந்த அளவுக்கு திரையில் கொண்டு வருவார்? என்ற சந்தேகம் எழும். இதை ஏற்கனவே டைரக்டர் குறும்படமாக எடுத்து வெற்றி கண்டிருப்பதால், சந்தேகம் நீங்கியது” என்றார்.