சினிமா செய்திகள்

“சினிமாவில் நீடிக்கும் ரகசியம்!” - ரகுல்பிரீத் சிங் + "||" + "The long lasting secret in cinema!" - Rakul Preet Singh

“சினிமாவில் நீடிக்கும் ரகசியம்!” - ரகுல்பிரீத் சிங்

“சினிமாவில் நீடிக்கும் ரகசியம்!” - ரகுல்பிரீத் சிங்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ள ரகுல் பிரீத் சிங் தற்போது இந்தி படத்திலும் நடிக்கிறார். இதற்காக உடல் எடையை குறைத்துள்ளார்.
 உடற்பயிற்சி, உணவு, சினிமா குறித்து ரகுல் பிரீத் சிங் கூறியதாவது:-

“எனக்கு ‘ஜிம்’மில் இருப்பது பிடிக்கும். தினமும் ஒரு மணிநேரம் உடற்பயிற்சி செய்கிறேன். இந்தி படத்துக்காக 45 நாட்களில் 8 கிலோ எடையை குறைத்தேன். ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வதற்கு முன்னால் ஒரு கப் காபியில் ஒரு ஸ்பூன் நெய்யை சேர்த்து புல்லட் காபி குடிப்பேன்.

இளம் தலைமுறையினர் அரசியலில் ஆர்வம் காட்டுகின்றனர். அதனால்தான் இந்த தடவை தேர்தலில் ஓட்டு சதவீதம் அதிகமானது. அரசியல் மீது நல்ல புரிதலும், சமூக அக்கறையும் இருந்து அரசியலுக்கு வந்தால் நிறைய பிரச்சினைகளை தீர்த்து வைக்க முடியும்.

6 ஆண்டுகளாக நான் சினிமாவில் நீடிக்கும் ரகசியம், சினிமா முழுக்க நானே இருக்க வேண்டும், நானே பேசவேண்டும், நானே நடனம் ஆடவேண்டும் என்றும், திரையை ஒட்டுமொத்தமாக நானே ஆக்கிரமிக்க வேண்டும் என்றும் எப்போதும் நினைக்க மாட்டேன். நான் நடித்த எல்லா படங்களுக்கும் ரசிகர்கள் ஆதரவு தருகிறார்கள்.

ஒரு சினிமாவுக்கு பின்னால் நாங்கள் படும் கஷ்டங்களை யாரும் பார்ப்பது இல்லை. வெற்றி தோல்வியைத்தான் பார்க்கிறார்கள். ரசிகர்களுக்கு பிடிக்கும் படங்கள் எடுக்க எல்லா முயற்சியும் செய்கிறோம். சில நேரம் பலன் கிடைக்கும். சில நேரம் கிடைக்காது.”

இவ்வாறு ரகுல்பிரீத் சிங் கூறினார்.


தொடர்புடைய செய்திகள்

1. சம்பள விஷயத்தில் கெடுபிடி செய்கிறேனா? ரகுல் பிரீத்சிங் விளக்கம்
தமிழ், தெலுங்கில் முன்னணி கதாநாயகியாக இருக்கும் ரகுல் பிரீத் சிங் இந்தி படங்களிலும் நடிக்கிறார். தற்போது கமல்ஹாசனுடன் இந்தியன்-2 படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார்.