சினிமா செய்திகள்

தெலுங்கு திகில் படத்தில் ரெஜினா கசன்ட்ரா! + "||" + Telugu horror movie Regina Casandra

தெலுங்கு திகில் படத்தில் ரெஜினா கசன்ட்ரா!

தெலுங்கு திகில் படத்தில் ரெஜினா கசன்ட்ரா!
ரெஜினா கசன்ட்ரா முதன்முதலாக ஒரு தெலுங்கு திகில் படத்தில் நடிக்கிறார்.
‘கண்டநாள் முதல்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர், ரெஜினா கசன்ட்ரா. தொடர்ந்து அவர் அழகிய அசுரா, கேடி பில்லா கில்லாடி ரங்கா, யாமிருக்க பயமேன் உள்பட பல படங்களில் இவர் நடித்து இருக்கிறார்.

தமிழ் படங்களைப்போல் தெலுங்கு படங்களிலும் இவர் கவனம் செலுத்துகிறார். முதன்முதலாக இவர் ஒரு தெலுங்கு திகில் படத்தில் நடிக்கிறார். அந்த படத்தின் பெயர், ‘எவரு.’ இதில், ரெஜினா கசன்ட்ரா கதைநாயகியாக நடிக்க, ஆத்வி ஷேஷ் கதைநாயகனாக நடித்துக் கொண்டிருக்கிறார்கள். முரளி சர்மா முக்கிய வேடத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தை ’வெங்கட் ராம்ஜி என்ற புது டைரக்டர் இயக்கி வருகிறார். படப்பிடிப்பு கொடைக்கானல், ஐதராபாத் ஆகிய இடங்களில் நடைபெற்றது. இறுதிகட்ட படப்பிடிப்பு இப்போது நடைபெறுகிறது. படத்தை வருகிற ஆகஸ்டு மாதம் திரைக்கு கொண்டுவர திட்டமிட்டு இருக்கிறார்கள்.