சினிமா செய்திகள்

‘நான் ஈ’ வில்லன் சுதீப் நடித்து5 மொழிகளில் வெளிவரும் ‘பயில்வான்’ + "||" + 5 languages Pailwan

‘நான் ஈ’ வில்லன் சுதீப் நடித்து5 மொழிகளில் வெளிவரும் ‘பயில்வான்’

‘நான் ஈ’ வில்லன் சுதீப் நடித்து5 மொழிகளில் வெளிவரும் ‘பயில்வான்’
‘கிச்சா சுதீபா’ நடித்துள்ள புதிய படம், ‘பயில்வான்’.
‘நான் ஈ,’ ‘புலி’ ஆகிய படங்களின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த சுதீப் தனது பெயரை, ‘கிச்சா சுதீபா’ என்று மாற்றிக் கொண்டார். இவர் நடித்துள்ள புதிய படம், ‘பயில்வான்.’ இதில் கிச்சா சுதீபா மல்யுத்த வீரராக நடித்து இருக்கிறார். கதாநாயகி, அகான்ஷா. பிரபல இந்தி நடிகர் சுனில் ஷெட்டி, ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

கிருஷ்ணா டைரக்டு செய்ய, ஸ்வப்னா கிருஷ்ணா தயாரித்துள்ளார்.. ‘பயில்வான்’ படத்தை பற்றி டைரக்டர் கிருஷ்ணா கூறியதாவது:-

‘‘ஒரு மல்யுத்த வீரர் தனது கனவுகளை நனவாக்க அவர் மேற்கொள்ளும் பயணத்தையும், அதில் அவர் சந்திக்கும் சவால்களையும் பற்றிய கதை, இது. இதில், மல்யுத்த வீரராக கிச்சா சுதீபா நடித்து இருக்கிறார். பொழுதுபோக்கு அம்சங்களுடன் படம் தயாராகி இருக்கிறது.

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய 5 மொழிகளில் படம் வெளிவர இருக்கிறது. இந்த படத்துக்காக ஹாலிவுட், பாலிவுட், தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் புகழ்பெற்ற தொழில்நுட்ப கலைஞர்களுடன் இணைந்து பணியாற்றியது, மிகவும் மகிழ்ச்சி அளித்தது.’’