சினிமா செய்திகள்

பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் வெளியான பாகுபலி நாயகனின் சாஹோ டீசர் + "||" + saaho movie teaser released

பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் வெளியான பாகுபலி நாயகனின் சாஹோ டீசர்

பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் வெளியான பாகுபலி நாயகனின் சாஹோ டீசர்
பிரமாண்ட சண்டை காட்சிகளுடன் வெளியான பாகுபலி நாயகன் பிரபாசின் சாஹோ டீசர்!" படத்தின் டீசரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
மும்பை

பாகுபலி படத்தின் பிரம்மாண்ட வெற்றியை தொடர்ந்து பிரபாஸ் ஹீரோவாக நடித்து வரும் படம் சாஹோ. ஷ்ரத்தா கபூர் இந்த படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக நடிக்கிறார். இவர்களுடன் ஜாக்கி ஷெராப், நீல் நிதின் முகேஷ், மந்திரா பேடி, ஈவ்லின் சர்மா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரூ.150 கோடி பட்ஜெட்டில் பிரமாண்டமாக உருவாகி வரும் இந்தப் படத்தை யூவி என்டர்டைன்மெண்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அருண் விஜய் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தை சுஜீத் எழுதி இயக்குகிறார். தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது.

இந்த படத்தின் முதல் புரமோ வீடியோவை பிரபாஸின் பிறந்தநாள் அன்று படக்குழு வெளியிட்டது. தற்போது இந்தப் படத்தின் டீசரை படக்குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர். படத்தின் டீசரில் பிரமிக்க வைக்கும் சண்டைக்காட்சிகள் இடம்பெற்றுள்ளன.

`ஆர்மெகடான்', 'மிஷன் இம்பாஸிபிள்', 'டிரான்ஸ்ஃபார்மர்ஸ்' உள்ளிட்ட ஹாலிவுட் திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் காட்சிகள் அமைத்த கென்னி பேட்ஸ் இந்தப் படத்தின் சண்டைக்காட்சிகளை அமைத்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.
தொடர்புடைய செய்திகள்

1. சிங்கத்துடன் விளையாடிய நடிகை காஜல் அகர்வால்
காஜல் அகர்வால், துபாய் விலங்கியல் பூங்காவில், சிங்கம், ஓட்டக சிவிங்கி, பாண்டா கரடி உள்ளிட்ட விலங்குகளுடன் விளையாடி மகிழ்ந்துள்ளார்.
2. பொது இடத்தில் புகைபிடித்த தெலுங்கு நடிகருக்கு அபராதம்
பொது இடத்தில் புகை பிடித்ததாக தெலுங்கு நடிகர் ராம் போதினேனிக்கு ஐதராபாத் போலீசார் 200 ரூபாய் அபராதம் விதித்தனர்.
3. 14-வது மாடியில் வீடு வாங்கிய நடிகை தமன்னா ; சதுர அடி ரூ.80,778
மும்பையில் 14-வது மாடியில் சதுர அடி ரூ.80,778க்கு வீடு வாங்கியுள்ளார் நடிகை தமன்னா.
4. இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் - நடிகர் நாசர்
இன்று மாலை முதலமைச்சரை சந்திக்க நேரம் கேட்டுள்ளோம் என துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து பின் நடிகர் நாசர் பேட்டி அளித்தார்.
5. நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக களமிறங்கிய அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள்
நடிகர் விஜய் ரசிகர்களுக்கு போட்டியாக அஜித் மற்றும் சூர்யா ரசிகர்கள் களமிறங்கி உள்ளனர்.