சினிமா செய்திகள்

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில்சிம்பு நடிக்கும் அதிரடி அரசியல் படம்! + "||" + Political action film starring Simbu

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில்சிம்பு நடிக்கும் அதிரடி அரசியல் படம்!

வெங்கட் பிரபு டைரக்‌ஷனில்சிம்பு நடிக்கும் அதிரடி அரசியல் படம்!
வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் சிம்பு நடிக்கும் படம் ‘மாநாடு’.
‘அமைதிப்படை-2,’ ‘கங்காரு’ ஆகிய படங்களை தயாரித்தவர், சுரேஷ் காமாட்சி. இவர் தயாரித்துள்ள ‘மிக மிக அவசரம்’ என்ற புதிய படம் மிக விரைவில் திரைக்கு வர இருக்கிறது. இதைத்தொடர்ந்து வெங்கட் பிரபு டைரக்‌ஷனில் சிம்பு நடிக்க இருக்கும் ‘மாநாடு’ படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்கிறார்.

இதில், பிரபல டைரக்டர் பிரியதர்ஷனின் மகள் கல்யாணி பிரியதர்ஷன் கதாநாயகியாக நடிக்கிறார். இவர்கள் தவிர, சில முன்னணி நடிகர்-நடிகைகள் பலரும் படத்தில் இடம் பெறுகிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். ‘மாநாடு’ படத்தை பற்றி டைரக்டர் வெங்கட் பிரபு கூறுகிறார்:-

‘‘இது, முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில், அதிரடி அரசியல் படமாக உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் தயாராகும் படம், இது. இந்த படம் கைவிடப்பட்டது என்று சிலர் வதந்தியை பரப்பியிருக்கிறார்கள். அது உண்மை அல்ல.

வருகிற 25-ந் தேதி பாடல் காட்சியுடன், மலேசியாவில் முதல் கட்ட படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. சில முக்கிய காட்சிகளையும் அங்கே படமாக்க திட்டமிட்டு இருக்கிறோம்.’’