சினிமா செய்திகள்

கிரிக்கெட் வீரருடன் காதலா? - நடிகை அனுபமா + "||" + Love with a cricket player? - actress Anupama

கிரிக்கெட் வீரருடன் காதலா? - நடிகை அனுபமா

கிரிக்கெட் வீரருடன் காதலா? - நடிகை அனுபமா
நடிகைகள் விளையாட்டு வீரர்களை காதலிப்பதும், திருமணம் செய்து கொள்வதும் சகஜம். கிரிக்கெட் வீரர் அசாருதீன் இந்தி நடிகை சங்கீதா பிஜ்லானியை மணந்தார். 4 வருடங்களுக்கு பிறகு இருவரும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்தனர்.
கிரிக்கெட் வீரர் விராட்கோலியும் இந்தி நடிகை அனுஷ்கா சர்மாவும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர்.

சில நடிகைகளும் கிரிக்கெட் வீரர்களும் ரகசியமாக காதலித்து வருகிறார்கள். இந்த நிலையில் நடிகை அனுபமா பரமேஸ்வரன் கிரிக்கெட் வீரர் பும்ராவை காதலிப்பதாக தகவல் வெளியானது. அனுபமா பரமேஸ்வரன் நிவின் பாலியுடன் பிரேமம் மலையாள படத்தில் அறிமுகமானார். தமிழில் கொடி படத்தில் தனுஷ் ஜோடியாக நடித்தார். தெலுங்கு கன்னட படங்களிலும் நடித்துள்ளார்.

அனுபமா பரமேஸ்வரனும், பும்ராவும் நெருங்கி பழகுவதாகவும், இருவரும் அடிக்கடி ரகசியமாக சந்தித்து வருவதாகவும் கிசுகிசுக்கள் வந்தன. டுவிட்டரில் அனுபமா வெளியிடும் புகைப்படங்கள் தனக்கு பிடித்து இருப்பதாக பும்ராவும் உடனுக்குடன் பதிவு செய்துள்ளார். அதுபோல் பும்ரா போடும் புகைப்படங்களையும் அனுபமா லைக் செய்கிறார்.

காதல் கிசுகிசு குறித்து இருவரும் எந்த கருத்தும் தெரிவிக்காமல் இருந்தனர். இந்த நிலையில் அனுபமா தற்போது இதற்கு விளக்கம் அளித்துள்ளார். அவர் கூறும்போது, “எனக்கும், பும்ராவுக்கும் காதல் என்று தகவல்கள் பரவி வருகின்றன. நாங்கள் இருவரும் நெருங்கிய நண்பர்கள். வேறு எந்த தொடர்பும் இல்லை” என்று கூறியுள்ளார்.