சினிமா செய்திகள்

பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே + "||" + India vs Pakistan: Poonam Pandey Rips Pakistani Promo ad Featuring Abhinandan Ahead of Ind vs Pak ICC Cricket World Cup 2019 Clash

பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே

பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ -சர்ச்சையை கிளப்பிய நடிகை பூனம் பாண்டே
பாகிஸ்தான் வீடியோவுக்கு எதிராக வீடியோ பதிவிட்டு சர்ச்சையை கிளப்பி உள்ளார் நடிகை பூனம் பாண்டே.
இங்கிலாந்தில் நடந்து வரும் உலகக்கோப்பை தொடரில் வரும் 16-ம் தேதி இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளன. இந்த போட்டிக்காக பாகிஸ்தான் ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள அபிநந்தன் குறிந்த விளம்பர வீடியோ சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்திய விமானப்படை வீரரை போன்று மேக்கப் செய்யப்பட்ட ஒருவர் இந்தியா ஜெர்சியுடன் டீ அருந்துகிறார். அப்போது இந்திய அணியின் திட்டங்கள் என்ன, எந்தெந்த வீரர்கள் களமிறங்குவார்கள் போன்ற கேள்விகள் அந்த நபரிடம் கேட்கப்படுகிறது. அதற்கு அவர், "மன்னிக்க வேண்டும், என்னால் இதனை கூற முடியாது" என அபிநந்தன் கூறியது போல கூறுகிறார். 

அதன் பின் அந்த நபர் டீ கப்பை எடுத்துக்கொண்டு நகரும்போது அதனை ஒரு கை வாங்குகிறது. அதன் பின், கோப்பையை மீண்டும் கொண்டு வருவோம் என வருகிறது. அபிநந்தனை கேலி செய்யும் வகையில் எடுக்கப்பட்ட இந்த  விளம்பரம் இந்திய ரசிகர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், இந்த விளம்பரத்திற்கு எதிராக பல தரப்பில் விமர்சனங்கள் வந்த நிலையில் இந்தி சர்ச்சை நடிகை பூனம் பாண்டே வழக்கம் போல இந்த  விஷயத்திற்கு பதிலடி தருகிறேன் என்று வீடியோ ஒன்றை பதிவிட்டு சர்ச்சையை கிளப்பியுள்ளார். பூணம் பாண்டே ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள அந்த வீடியோவை பலரும் விமர்சித்து வருகின்றனர்.