குருவியார் கேள்வி-பதில்கள்


குருவியார் கேள்வி-பதில்கள்
x
தினத்தந்தி 16 Jun 2019 5:41 AM GMT (Updated: 2019-06-16T11:11:49+05:30)

உங்கள் கேள்விகளுக்கு சூடாகவும், சுவையாகவும் பதில் அளிக்கிறார், குருவியார். கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி. குருவியார், தினத்தந்தி, சென்னை-600007

குருவியாரே, ‘சிவாஜி’ பட நாயகி ஸ்ரேயாவை திரையில் பார்க்க முடிவதில்லையே...? என்ன காரணம்? (விநாயகராஜ், திருக்கோவிலூர்)

ஸ்ரேயா இன்னும் கதாநாயகியாகத்தான் நடிப்பேன் என்று கூறிவருகிறாராம். அவருக்கு கதாநாயகி வாய்ப்பு கொடுக்க எந்த டைரக்டரும் தயாராக இல்லை என்பதால், வீட்டிலேயே சும்மா உட்கார்ந்திருக்கிறார்!

***

மாதவி என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் இப்போது எங்கே வசிக்கிறார்? (ஆர்.புவனேஷ், மும்பை)

மாதவி பத்து பதினைந்து வருடங்களாக அமெரிக்காவில் வசித்து வருகிறார். அவருக்கு பேரன்–பேத்திகள் எல்லாம் இருக்கிறார்கள்!

***

குருவியாரே, திருமணம் ஆன பின்பும் சமந்தா ‘மார்க்கெட்’டை தக்கவைத்துக் கொண்டிருக்கிறாரே...எப்படி? (கே.அகமது செரீப், திருச்சி)

கவர்ச்சி நடிப்பும், கவன உழைப்பும்தான் அந்த ரகசியம். முன்பை விட இப்போது சமந்தா படுகவர்ச்சியாக நடித்து வருகிறார். ரசிகர்கள் மனதில், ‘கனவுக்கன்னி’யாகவே இருக்க வேண்டும் என்பதற்காகவே அவர் கவர்ச்சி காட்டி நடிக்கிறாராம்!

***

 தமிழ் பட உலகில் பக்தி படங்கள் எதுவும் வருவதில்லையே...என்ன காரணம்? (பி.வாசுதேவன், பெரம்பலூர்)

தமிழ் பட உலகில் மட்டுமல்ல...மற்ற மொழிகளிலும் பக்தி படங்கள் தயாரிக்கப்படுவதில்லை. ‘சின்னத்திரை’யில் பக்தி தொடர்கள் வெளிவருவதே இதற்கு காரணம் என்கிறார், ஒரு வினியோகஸ்தர்!

***

குருவியாரே, விந்தியா என்று ஒரு நடிகை இருந்தாரே...அவர் என்ன ஆனார்? (ஜே.டேனியல் ராஜ், பேராவூரணி)

விந்தியா சினிமாவை மறந்து அரசியலுக்கு போய்விட்டார். சமீபத்தில் அவர் ஜெயலலிதா சமாதிக்கு சென்று மாம்பழங்களை வைத்து வணங்கினார்!

***

டைரக்டர் கவுதம் வாசுதேவ் மேனன் திகில் படம் எடுத்து இருக்கிறாரா? இதுவரை எடுக்கவில்லை என்றால் இனிமேலாவது அவர் திகில் படம் எடுப்பாரா? (எம்.ஜோதி, தேவகோட்டை)

கவுதம் வாசுதேவ் மேனன் ஏற்கனவே 2 திகில் படங்களை எடுத்து இருக்கிறார். அதில் ஒரு படத்தின் பெயர், ‘நடுநிசி நாய்கள்.’ இன்னொரு படத்தின் பெயர், ‘பச்சைக்கிளி முத்துச்சரம்!’

***

குருவியாரே, பழைய கதாநாயகிகள் அம்பிகா, பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் இப்போது எந்த படத்தில் நடித்து வருகிறார்கள்? (எஸ்.பிரபாகரன், சேலம்)

ராதிகா சரத்குமார், குஷ்பு சுந்தர் ஆகிய இருவரையும் போல் அம்பிகாவும், பூர்ணிமா பாக்யராஜும் ‘சின்னத்திரை’ தொடர்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்கள்!

***

அஜித்குமாரை வைத்து, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை இயக்கிய வினோத், யாரிடம் உதவி டைரக்டராக இருந்தார்? (ஆர்.சுந்தரேசன், மதுரை)

வினோத், பார்த்திபனிடம் உதவி டைரக்டராக இருந்தார்.!

***

குருவியாரே, ‘மார்க்கெட்’டை தக்கவைத்துக் கொள்வதற்காக உடை குறைப்பு செய்து வரும் நடிகைகள் யார்–யார்? (ஜி.கோபால், கரூர்)

 தமன்னா, காஜல் அகர்வால், அமலாபால், ஓவியா ஆகிய 4 பேரும் படத்துக்கு படம் போட்டி போட்டு உடை குறைப்பு செய்து வருகிறார்கள்!

***

எந்த நடிகையிடமும் இல்லாத அளவுக்கு நிவேதா பெத்துராஜிடம் அழகு கொட்டிக் கிடப்பதாக சொல்கிறார்களே...அது உண்மையா? (டி.பி.ராஜன், கோவை)

‘‘நிவேதா பெத்துராஜ், அழகிதான். ஆனால், பேரழகி அல்ல!’’ என்கிறார், பிரபல ஒப்பனையாளர் ஒருவர்!

***

குருவியாரே, பிரபல கதாநாயகிகளில் யாருக்கு அதிக ‘பாய் ப்ரெண்ட்ஸ்’ இருக்கிறார்கள்? (ராம்குமார், ராசிபுரம்)

எமிஜாக்சனுக்கு அதிக ‘பாய் ப்ரெண்ட்ஸ்’ இருப்பதாக பேசப்படுகிறது!

***

‘சின்னத்திரையில் அம்பிகாவின் நடிப்பு எப்படி? (எஸ்.நரேஷ், மதுரவாயல்)

‘அம்மா’ வேடத்திலும் சிறந்த நடிப்பை வெளிப்படுத்த முடியும் என்று அம்பிகா நிரூபித்து வருகிறார்!

***

குருவியாரே, ‘சிந்துபாத்’ படத்தில் நடித்துள்ள விஜய் சேதுபதியின் மகன் சூர்யா, தொடர்ந்து நடிப்பாரா? (கே.பாண்டியராஜன், அருப்புக்கோட்டை)

‘சிந்துபாத்’ படத்தில் நடித்ததுடன் சினிமா ஆசையை நிறுத்திக் கொள்...இனிமேல் படிப்பில் கவனம் வை என்று அப்பா விஜய் சேதுபதி மகனின் நடிப்பு ஆசைக்கு தடை உத்தரவு போட்டு இருக்கிறாராம்!

***

விக்ரம் நடித்த ‘காசி’ படத்தை இயக்கிய வினயன் தற்போது இயக்கும் புதிய படம் எது? (இரா.விஜய்குமார், உடையாப்பட்டி)

வினயன் தற்போது, ‘ஆகாச கங்கா–2’ என்ற புதிய படத்தை தமிழ், மலையாளம் ஆகிய 2 மொழிகளில் டைரக்டு செய்து வருகிறார். அதில் மலையாள பட உலகில் வளர்ந்து வரும் ஆசிப் அலி கதாநாயகனாக நடித்து வருகிறார். டைரக்டர் சித்திக் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்!

***

குருவியாரே, ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அஜித் நடிக்கும் படம் எது, அந்த படத்தை இயக்குபவர் யார்? (கா.மதன், ஈரோடு)

‘நேர்கொண்ட பார்வை’ படத்தை அடுத்து அந்த படத்தின் டைரக்டர் வினோத் இயக்கும் புதிய படத்தில், அஜித் நடிக்க இருக்கிறார்!

***

‘நடிகர் திலகம்’ சிவாஜிகணேசன் நடித்து வெளிவந்த ‘நீதி’ படம், எந்த மொழியில் இருந்து ‘ரீமேக்’ செய்யப்பட்டது? அதன் தயாரிப்பாளர் யார்? (பெ.அரவிந்த், புதுச்சேரி)

‘நீதி’ படம், ‘துஷ்மன்’ என்ற இந்தி படத்தின் தழுவல். அந்த படத்தின் தயாரிப்பாளர், கே.பாலாஜி!

***

குருவியாரே, கீர்த்தி சுரேஷ், ‘டூ பீஸ்’ உடையில் எப்போது நடிப்பார்? (எஸ்.கதிரேசன், பேரணாம்பட்டு)

‘‘அப்படி ஒரு கவர்ச்சி உடையில் ஒருபோதும் நடிக்க மாட்டேன்’’ என்று கீர்த்தி சுரேஷ் கூறுகிறார்!

***

சோனியா அகர்வால் இப்போது என்ன செய்து கொண்டிருக்கிறார்? (பி.கதிர்வேல், போரூர்)

தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம் ஆகிய 4 மொழிகளிலும் வாய்ப்பு கிடைக்கும் படங்களில் நடித்து வருகிறார்!

***

குருவியாரே, ‘களவாணி’ விமல் சம்பளத்தை குறைத்து விட்டாராமே, என்ன காரணம்? (ரவிச்சந்திரன், ஆவுடையாள்புரம்)

கதாநாயகர்களுக்கு இடையே உள்ள போட்டியை சமாளிக்கவே விமல் சம்பள குறைப்பு செய்திருக்கிறார்!

***

ஜெய்–அஞ்சலி இருவரும் மீண்டும் ஒரு படத்தில் ஜோடியாக நடிப்பார்களா? (பி.முருகேசன், டி.கல்லுப்பட்டி)

அவர்கள் இருவரும் கேட்கும் சம்பளத்தை கொடுத்தால், நிச்சயமாக ஜோடி சேர்ந்து நடிப்பார்களாம்!

***

Next Story