சினிமா செய்திகள்

கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி + "||" + Vijay Sethupathi, The role of the heroine's father

கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி

கதாநாயகி தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி
கதாநாயகியின் தந்தை வேடத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளார்.

விஜய் சேதுபதி தமிழ் பட உலகில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இமேஜ் பார்க்காமல் அனைத்து கதாபாத்திரங்களிலும் நடிக்கிறார். சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக வந்தார். இந்த படம் சர்வதேச பட விழாக்களில் திரையிட தேர்வாகி உள்ளது. ரஜினிகாந்தின் பேட்ட மற்றும் விக்ரம் வேதா படங்களில் வில்லனாக நடித்தார்.

சீதக்காதியில் வயதான நாடக கலைஞர் வேடம் ஏற்றார். தற்போது சிந்துபாத், கடைசி விவசாயி, சங்கத்தமிழன், லாபம், மாமனிதன் ஆகிய படங்கள் கைவசம் உள்ளன. மற்ற மொழிகளில் நடிக்கவும் வாய்ப்புகள் வருகின்றன. சிரஞ்சீவியின் சைரா நரசிம்ம ரெட்டி சரித்திர படத்தில் நடிக்கிறார். ஜெயராமுடன் மலையாள படமொன்றிலும் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் தெலுங்கில் தயாராகும் உப்பெனா என்ற படத்தில் கதாநாயகியின் தந்தை வேடத்தில் நடிக்க சம்மதித்து உள்ளார். இந்த படத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சாய் தரம் தேஜ் சகோதரர் வைஷ்ணவ் தேஜ் கதாநாயகனாக அறிமுகமாகிறார். நாயகியாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டியின் தந்தையாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார். படத்தில் வில்லனும் விஜய் சேதுபதிதான் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னணி கதாநாயகனான விஜய் சேதுபதி கதாநாயகியின் தந்தையாக நடிப்பது பலரையும் ஆச்சரியப்படுத்தி உள்ளது. இந்த படத்தை புச்சிபாபு சனா இயக்குகிறார். காதல் கதையம்சம் உள்ள படமாக தயாராகிறது.


தொடர்புடைய செய்திகள்

1. நடிகர் விஜயுடன் இணைகிறார் விஜய் சேதுபதி -அதிகாரபூர்வ அறிவிப்பு
நடிகர் விஜய் நடிக்கும் புதிய படத்தில் விஜய் சேதுபதி இணைந்திருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2. அமீர்கான் படத்தில் விஜய் சேதுபதி!
அமீர்கான் நடிக்க இருக்கும் ஒரு புதிய இந்தி படத்தில், அவருடன் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கிறார்.
3. கனடா பட விழாவில் திரையிட விஜய் சேதுபதி படம் தேர்வு
கனடா பட விழாவில் திரையிட நடிகர் விஜய் சேதுபதியின் படம் தேர்வாகி உள்ளது.