சினிமா செய்திகள்

17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன் + "||" + The couple reunited after 17 years, Madhavan - Simran

17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்

17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ஜோடி சேர்ந்த மாதவன் - சிம்ரன்
17 வருடங்களுக்கு பிறகு மீண்டும் மாதவனுடன், சிம்ரன் ஜோடி சேர்ந்துள்ளார்.

தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் தயாராகும் ‘ராக்கெட்ரி-நம்பி விளைவு’ என்ற படத்தில் மாதவன் நடித்து வருகிறார். இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் வாழ்க்கையை மையமாக வைத்து இந்த படம் தயாராகிறது. வெளிநாட்டுக்கு ரகசியங்களை விற்க முயன்றதாக நம்பி நாராயணன் மீது தேச விரோத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு 1994-ல் கைது செய்யப்பட்டார்.


பின்னர் இந்த வழக்கை சி.பி.ஐ விசாரித்து நம்பி நாராயணன் குற்றமற்றவர் என்று நிரூபித்தது. இதைத்தொடர்ந்து நம்பி நாராயணனை வழக்கில் இருந்து சுப்ரீம் கோர்ட்டு விடுவித்தது. அவருக்கு கேரள அரசு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

இந்த சம்பவங்களை உள்ளடக்கி சஸ்பென்ஸ் திகில் படமாக ராக்கெட்ரி படத்தை எடுக்கின்றனர். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இதில் கதாநாயகியாக யார் நடிக்கிறார் என்பதை தெரிவிக்காமல் இருந்தனர். தற்போது சிம்ரன் நடிப்பதாக மாதவன் அறிவித்து அவருடன் சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு உள்ளார்.

ஏற்கனவே இருவரும் மணிரத்னம் இயக்கத்தில் 2002-ல் வெளியான கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் இணைந்து நடித்து இருந்தார்கள். 17 வருடங்களுக்கு பிறகு ராக்கெட்ரி படத்தில் மீண்டும் ஜோடி சேர்ந்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. தாய்லாந்தில் மீண்டும் பரிதாபம்: அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலி
தாய்லாந்தில் அருவியில் இருந்து விழுந்து மேலும் 5 யானைகள் பலியாகின.
2. மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது - காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
மேட்டூர் அணை மீண்டும் நிரம்பியது. காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
3. மும்பை மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது - போக்குவரத்து முடங்கியதால் பொதுமக்கள் பரிதவிப்பு
மும்பையில் இடை விடாமல் கனமழை கொட்டி தீர்த்ததால் மும்பை நகரம் மீண்டும் வெள்ளத்தில் மிதக்கிறது. ரெயில், வாகன போக்குவரத்து முடங்கியதால் மக்கள் பரிதவித்து வருகிறார்கள்.
4. காங்கோவில் மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரிப்பு
காங்கோவில் கடந்த 2014-ம் ஆண்டு எபோலா வைரஸ் தாக்கி பெரும் உயிர்சேதம் ஏற்பட்ட நிலையில், அங்கு மீண்டும் எபோலா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ளது.
5. பகுஜன் சமாஜ் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு
பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவராக மாயாவதி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.