சுப்பிரமணியம் சிவா டைரக்‌ஷனில் ‘வெள்ளை யானை’


சுப்பிரமணியம் சிவா டைரக்‌ஷனில் ‘வெள்ளை யானை’
x
தினத்தந்தி 18 Jun 2019 2:42 PM GMT (Updated: 18 Jun 2019 2:42 PM GMT)

டைரக்டர் சுப்பிரமணியம் சிவா இயக்கியிருக்கும் புதிய படம், வெள்ளை யானை.

சுப்பிரமணியம் சிவா, கடந்த 2003-ம் ஆண்டில் டைரக்டர் ஆனார். தனுசை வைத்து அவர் இயக்கிய ‘திருடா திருடி’ படம் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து யோகி, சீடன் ஆகிய படங்களை இயக்கினார். வெற்றிமாறன் டைரக்‌ஷனில், வட சென்னை, அசுரன் ஆகிய படங்களில் நடித்தும் இருக்கிறார்.

அவர் இயக்கியிருக்கும் புதிய படம், ‘வெள்ளை யானை.’ இதில் சமுத்திரக்கனி கதைநாயகனாக நடிக்க, அவருடன் கதைநாயகியாக ஆத்மியா நடித்து இருக்கிறார். இவர், ‘மனம் கொத்தி பறவை’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர். யோகி பாபு, ஈ.ராமதாஸ், டைரக்டர் மூர்த்தி, எஸ்.எஸ்.ஸ்டான்லி ஆகியோரும் நடித்துள்ளனர். வினோத்குமார் தயாரித்து இருக்கிறார்.

படத்தை பற்றி டைரக்டர் சுப்பிரமணியம் சிவா கூறியதாவது:-

“இது, முழுக்க முழுக்க விவசாயம் சம்பந்தப்பட்ட படம். இந்த உலகில் அனைத்து உயிரினங்களும் உணவை சார்ந்து இருக்கிறது. உணவு விவசாயத்தையும், விவசாயியையும் சார்ந்து இருக் கிறது. விவசாயம் தண்ணீரை சார்ந்து இருக்கிறது என்ற கருத்தை அடிப்படையாக கொண்ட படம். விவசாயிகளின் ஏமாற்றத்தையும், கண்ணீரையும், கோபத்தையும் கதை சித்தரிக்கும்.

படத்தின் இறுதிக்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது. படம் விரைவில் திரைக்கு வரும்” என்கிறார்.

Next Story