சினிமா செய்திகள்

“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி!” + "||" + Jothika is an acting monster

“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி!”

“ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி!”
ஜோதிகா நடித்து அடுத்து வெளிவர இருக்கும் படம், ‘ராட்சசி.’
ராட்சசி படத்தை புதுமுக டைரக்டர் சை.கவுதம்ராஜ் டைரக்டு செய்து இருக்கிறார். ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. ‘ராட்சசி’ பற்றி டைரக்டர் கவுதம்ராஜ் கூறுகிறார்:-

“ஜோதிகா கதாநாயகிகளுக்கு முக்கியத்துவம் உள்ள நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அதில் அவர் வெற்றிகரமாக பயணித்து வருகிறார்.

ஒவ்வொரு பையனோட முதல் கதாநாயகி, ஒரு டீச்சராகத்தான் இருப்பார். அந்த டீச்சரின் பெயர் கடைசி வரை நினைவில் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு கதாபாத்திரத்தில் ஜோதிகா நடித்து இருக்கிறார். அவரை தவிர வேறு யாரும் அந்த வேடத்தில் கச்சிதமாக நடித்து இருக்க முடியாது. தனக்கு சமுதாயத்தில் பொறுப்புணர்வு இருக்கிறது என்ற முழுமையான நம்பிக்கையுடன், அவர் தரமான கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்.

‘ராட்சசி’ கதையை கேட்டதில் இருந்து நிறைய ‘ஹோம் ஒர்க்’ செய்தார். நிறைய டீச்சர்களிடம் பேசினார். ஆசிரியைகளின் நடை, உடை, பாவனைகளை கூர்ந்து கவனித்தார். ஜோதிகா ஒரு நடிப்பு ராட்சசி. படத்தில் அவருடைய கதாபாத்திரத்தின் பெயர், கீதாராணி. இந்த படத்தின் ஹீரோ அவர்தான்.

இப்போது தமிழ்நாட்டில் இருக்கிற பெரிய பெரிய சாதனையாளர்கள், தொழில் அதிபர்கள், விஞ்ஞானிகள் பெரும்பாலானவர்களை உருவாக்கியது, அரசு பள்ளிகள்தான். தனியார் பள்ளி, அரசு பள்ளி என்கிற ஏற்றத்தாழ்வு உருவாகியிருக்கவே கூடாது. அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும் என்று போராடுகிறவர்தான் இந்த ‘ராட்சசி’ கீதாராணி.

அரசு பள்ளியில் மாற்றம் உருவாக்கப்பட வேண்டும் என்கிற கருத்து தமிழ்நாட்டில் எல்லோருடைய விருப்பமாக இருக்கிறது. அதை திரைவடிவம் ஆக்கியிருக்கிறோம்.”