கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி


கீர்த்தி சுரேசை சீண்டிய ஸ்ரீரெட்டி
x
தினத்தந்தி 18 Jun 2019 10:45 PM GMT (Updated: 18 Jun 2019 9:23 PM GMT)

நடிகை கீர்த்தி சுரேசை ஸ்ரீரெட்டி சீண்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தமிழ், தெலுங்கு பட உலகில் முன்னணி நடிகையாக இருக்கும் கீர்த்தி சுரேசுக்கு இந்தி படத்தில் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. இந்தி நடிகைகள் பலரும் ஒல்லியாக இருப்பதால் கீர்த்தி சுரேசும் அவர்கள் மாதிரி எடை குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டார். 2 மாதங்களாக கடும் உடற்பயிற்சிகள் செய்தார். உணவு கட்டுப்பாட்டிலும் இருந்தார்.

இதைத்தொடர்ந்து கணிசமான அளவு எடை குறைந்து ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் இருக்கிறார். ஒல்லியான புகைப்படங்களை சமூக வலைத்தளத்திலும் வெளியிட்டார். அந்த புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியானார்கள். அழகான தோற்றத்தை அலங்கோலமாக்கி விட்டதாக கவலை தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில் சர்ச்சை நடிகை ஸ்ரீரெட்டியும் கீர்த்தி சுரேஷ் தோற்றத்தை கேலி செய்துள்ளார். தனது முகநூல் பக்கத்தில், “நானும், கீர்த்தி சுரேசும் ஒரே விமானத்தில் பயணித்தோம். அப்போது நான் உள்பட யாராலும் கீர்த்தி சுரேசை அடையாளம் கண்டுகொள்ள முடியவில்லை. என்னிடம் பலர் செல்பி எடுத்துக்கொண்டனர். ஆனால் கீர்த்தி சுரேசை யாருக்கும் தெரியவில்லை.

எடை குறைத்த பிறகு நோயாளிபோல மாறிவிட்டார். கீர்த்தி சுரேஷ் நடித்துள்ள நடிகையர் திலகம் படம் சிறப்பாக வந்ததற்கு டைரக்டர்தான் காரணம். தற்போது சாய்பல்லவி சிறந்த நடிகையாக வளர்ந்து வருகிறார்” என்று பதிவிட்டுள்ளார். இதை பார்த்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள் ஸ்ரீரெட்டியை கண்டித்து வருகிறார்கள்.

Next Story