சினிமா செய்திகள்

ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்? + "||" + Secret engagement for Regina?

ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்?

ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம்?
நடிகை ரெஜினாவுக்கு ரகசிய நிச்சயதார்த்தம் நடந்தது குறித்து தகவல் வெளியாகி உள்ளது.

தமிழில் கண்ட நாள் முதல் படத்தில் அறிமுகமானவர் ரெஜினா கசான்ட்ரா. கேடி பில்லா கில்லாடி ரங்கா படத்தில் நடித்து பிரபலமானார். சரவணன் இருக்க பயமேன், மிஸ்டர் சந்திரமவுலி, சிலுக்குவார்பட்டி சிங்கம் ஆகிய படங்களிலும் நடித்துள்ளார். பார்ட்டி படத்தில் நடித்து முடித்துள்ளார். தற்போது சிம்புதேவன் இயக்கும் கசட தபற படத்தில் நடித்து வருகிறார்.

தெலுங்கிலும் முன்னணி நடிகையாக இருக்கிறார். ‘ஏக் லட்கி கோ தேக்கா’ என்ற படம் மூலம் இந்தியிலும் அறிமுகமாகி உள்ளார். இந்த படத்தில் ஓரின சேர்க்கையாளர் கதாபாத்திரத்தில் துணிச்சலாக நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். ரெஜினாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது.

இந்த நிலையில் ரெஜினாவுக்கு நிச்சயதார்த்தம் முடிந்துள்ளதாக தெலுங்கு பட உலகில் தகவல் பரவி உள்ளது. குடும்பத்தினர் மட்டுமே இதில் கலந்துகொண்டதாகவும், மிகவும் ரகசியமாக நிச்சயதார்த்தத்தை நடத்தி முடித்ததாகவும் பேசுகின்றனர். கைவசம் உள்ள படங்களை முடித்துவிட்டு விரைவில் அவர் திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ரெஜினாவுக்கு சமீப காலமாக பெரிய பட வாய்ப்புகள் இல்லை. இதனால் திருமணம் செய்துகொண்டு குடும்பத்தோடு செட்டில் ஆக அவர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. நிச்சயதார்த்தம் பற்றி பரவும் தகவலுக்கு ரெஜினா இதுவரை பதில் சொல்லவில்லை.