சினிமா செய்திகள்

விஜய் பட தலைப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள் + "||" + Vijay fans expect for Film Title

விஜய் பட தலைப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள்

விஜய் பட தலைப்பை எதிர்பார்க்கும் ரசிகர்கள்
விஜய் பட தலைப்பை அறிய அவரது ரசிகர்கள் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

விஜய் சர்கார் படத்துக்கு பிறகு அட்லி இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். நயன்தாரா கதாநாயகியாக வருகிறார். கதிர், ஜாக்கிஷெராப், ரெபா மானிகா, இந்துஜா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி உள்ளிட்ட மேலும் உள்ளனர்.

இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது. இதில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். இது விஜய்க்கு 63-வது படம் என்பதால் ‘தளபதி 63’ என்ற பெயரிலேயே படப்பிடிப்பை நடத்தினர். படத்தின் தலைப்பை அறிய ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.

இந்த நிலையில் விஜய் பிறந்தநாளையொட்டி வருகிற 21-ந் தேதி மாலை படத்தின் தலைப்பையும், முதல் தோற்றத்தையும் வெளியிடுகின்றனர். முந்தைய படங்களான தெறி, மெர்சல், சர்கார் தலைப்புகளும் இதே தேதியில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

வெறித்தனம், மைக்கேல், வெறி, சி.எம், கேப்டன் மைக்கேல் என்ற பெயர்கள் இந்த படத்தின் தலைப்பாக பரிசீலிக்கப்படுவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் பரவுகின்றன.

படத்தில் நடித்துள்ள பட்டிமன்ற நடுவரான ஞானசம்பந்தம் கூறும்போது, “விஜய் தனது 63-வது படத்தில் கால்பந்து பயிற்சியாளராக நடித்துள்ளார். இந்த படம் வெளியான பிறகு கால்பந்திற்கு ஏற்றம் வரும் என்று நம்புகிறேன்” என்றார்.

இந்த நிலையில் ஒற்றை வார்த்தையில் படத்தின் தலைப்பை தேர்வு செய்து இருப்பதாகவும் இந்த தலைப்பு அனைவரையும் ஆச்சரியப்பட வைக்கும் என்றும் இன்னொரு தகவலும் பரவி வருகிறது.