நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் - இயக்குனர் சுசீந்திரன்


நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் - இயக்குனர் சுசீந்திரன்
x
தினத்தந்தி 19 Jun 2019 11:34 PM GMT (Updated: 19 Jun 2019 11:34 PM GMT)

நல்ல கதாபாத்திரங்களில் தொடர்ந்து நடிப்பேன் என இயக்குனர் சுசீந்திரன் தெரிவித்தார்.


வெண்ணிலா கபடி குழு, நான் மகான் அல்ல, அழகர் சாமியின் குதிரை, ராஜபாட்டை, பாண்டிய நாடு, ஜீவா உள்ளிட்ட பல படங்களை இயக்கிய சுசீந்திரன் ‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படம் மூலம் நடிகராகி உள்ளார். நடிகரான அனுபவம் பற்றி அவர் கூறியதாவது:-

“சுட்டு பிடிக்க உத்தரவு படத்தில் நல்ல கதாபாத்திரம் அமைந்ததால் நடிக்க ஒப்புக்கொண்டேன். அதில் எனக்கு ஓடுவது மட்டுமே சவாலாக இருந்தது. படம் வெளியான பிறகு எனது நடிப்பை பலரும் பாராட்டியது மகிழ்ச்சியாக இருந்தது. நல்ல கதை மற்றும் வித்தியாசமான கதாபாத்திரம் அமைந்தால் தொடர்ந்து நடிப்பேன்.

இயக்குனர் தொழிலில் உச்சத்தை இன்னும் நான் அடையவில்லை. அதை தொட்டபிறகு நடிப்பு விஷயங்களில் கவனம் செலுத்துவேன். கென்னடி கிளப்‘, ‘ஏஞ்சலினா’ ஆகிய படங்களை இயக்கி முடித்துள்ளேன். இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. ‘ஏஞ்சலினா’ இக்கால இளைஞர்களுக்கான திகில் படம். இதில் பொள்ளாச்சி சம்பவமும் இடம்பெறும்.

இரண்டாவது பாகம் படங்கள் எடுப்பதில் எனக்கு உடன்பாடு கிடையாது. இரண்டாம் பாகம் படங்கள் எதுவும் முதல் பாகம் அளவுக்கு வெற்றி பெறவில்லை. எழுதும் போதே இரண்டு பாகத்தையும் எழுதினால் தான் வெற்றிபெறும். அப்படி எழுதி வெற்றியடைந்த படம் தான் ‘பாகுபலி’.” இவ்வாறு சுசீந்திரன் கூறினார்.

‘சுட்டு பிடிக்க உத்தரவு’ படத்தில் தன்னை நடிகராக அறிமுகப்படுத்திய இயக்குனர் ராம்பிரகாஷ் ராயப்பாவுக்கு சுசீந்திரன் தங்கச் சங்கிலி பரிசளித்து நன்றி தெரிவித்தார்.


Next Story